தஞ்சாவூர்: கும்பகோணம் பழைய பாலக்கரை பகுதியில் உள்ள காவிரியாற்றின் படித்துறையில் துணியில் சுற்றுப்பட்டு இறந்த நிலையில் பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தை கிடந்துள்ளது. குழந்தையின் சடலத்தை அங்குள்ள நாய் ஒன்று, தனது குட்டியை கவ்வி வருவதை போல காமராஜர் சிலை பின்புறம் உள்ள காய்கறி கடைக்கு அருகே கொண்டு வந்துள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் கும்பகோணம் கிழக்கு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
அதனை தொடர்ந்து போலீசார் சம்பவயிடத்திற்கு வந்து குழந்தையின் சடலத்தை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கோவையில் யோகா செய்து அசத்திய மாணவர்கள்