ETV Bharat / state

ஆட்சியர் பெயரை பயன்படுத்தி பணம் பறிக்க முயற்சி... பெண் கைது! - thanjavur collector

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரின் பெயரைப் பயன்படுத்தி பிரபல மருத்துவமனைகள், துணிக்கடை உரிமையாளர்களிடம் நூதன முறையில் பணம் பறிக்க முயன்ற கும்பலைச் சேர்ந்த பெண்ணை சைபர் க்ரைம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆட்சியர் பெயரை பயன்படுத்தி பணம் பறிக்க முயற்சி

author img

By

Published : Jul 30, 2021, 10:05 AM IST

தஞ்சாவூர்: பிரபல மருத்துவமனைகள், துணிக்கடை உரிமையாளர்கள் சிலரை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஃபோனில் தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தன்னை தஞ்சை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.

அதன் பின்னர், அவர்களிடம் ஒரு சில அரசுத் திட்டங்களுக்கு பணம் தேவைப்படுவதாகவும், மேற்படி திட்டத்திற்காக தலா 50,000 ரூபாய் அனுப்புமாறும் கூறி தன் வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட விபரங்களை அனுப்பியுள்ளார்.

நடவடிக்கையில் சந்தேகம்

இந்நிலையில், அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த அந்நபர்கள் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.

தொடர்ந்து இத்தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆட்சியர் இது பற்றி விசாரணை நடத்தி சம்பந்தபட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அந்த வங்கிக் கணக்கு கோயம்புத்தூர் ஓண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த ரெஜினா (40) என்பவரது கணக்கு என்று தெரிய வந்தது. இதையடுத்து அவரது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது. அவரைப் பிடிக்க தனிப்படையினர் கோயம்புத்தூர் விரைந்தனர்.

விசாரணையில் அதிர்ச்சி தகவல்

ரெஜினாவிடம் விசாரணை நடத்தியதில் அவர் அதே பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வருவதும், மோசடி கும்பலால் அவர் இச்சம்பவத்தில் பகடைக் காயாக பயன்படுத்தப்பட்டுள்ளார் என்பதும் தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்திய காவல் துறையினர், இச் சம்பவத்திற்கு மூல காரணமானவர்கள் திருவள்ளுர் மாவட்டம், வேப்பம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சந்தானம் (எ) சந்தான பாரதி (65) மற்றும் அவரது மனைவி ரீட்டா பபியா (50) எனக் கண்டறிந்தனர்.

குற்றவாளி கைது

இதைத் தொடர்ந்து, ரீட்டா பபியாவை தஞ்சாவூர் சைபர் க்ரைம் காவல் துறையினர் கைது செய்து ஆள்மாறாட்டம் செய்தல், ஏமாற்றுதல், கூட்டுச் சதி, தகவல் தொழில் நுட்ப சட்டப் பிரிவு 66டி ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நேற்று (ஜூலை.29) ரீட்டா திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். தலைமறைவாக உள்ள அவரது கணவர் சந்தான பாரதியை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இவர்கள் திருச்சி, நாமக்கல், வேலூர், நீலகிரி, கரூர் ஆட்சியர்களின் பெயரைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதும், சந்தான பாரதி ஏற்கெனவே இரண்டு முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல் - மக்கள் குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.