ETV Bharat / state

திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு... அடுத்த பிரச்னையை கிளப்பிய அர்ஜூன் சம்பத்! - காவி துண்டு, ருத்ராட்சை அணிவித்த அர்ஜூன் சம்பத்

தஞ்சாவூர்: பிள்ளையார்பட்டியில் அவமரியாதை செய்யப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு, காவி துண்டு, திருநீறு, ருத்ராட்ச மாலை அணிவித்து இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜுன் சம்பத் மரியாதை செலுத்தினார்.

Arjun sampath
author img

By

Published : Nov 6, 2019, 1:18 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டியில் நேற்று முந்தைய தினம் திருவள்ளுவர் சிலை மீது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் மாட்டு சாணம் வீசி அவமரியாதை செய்தனர். இது பல்வேறு தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து திருவள்ளுவரை அவமதிப்பு செய்தவர்களை கண்டித்தும், அவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் பல்வேறு கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றன.

saffron color shawl to thiruvalluvar
திருவள்ளுவருக்கு ருத்ராட்சை அணிவித்த அர்ஜூன் சம்பத்

இந்நிலையில் இன்று ராஜராஜசோழன் சதய விழாவிற்கு மாலை அணிவிக்க வந்த, இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜூன் சம்பத் அவமதிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு திருநீறு, ருத்ராட்ச மாலை, காவி துண்டு அணிவித்து மரியாதை செலுத்தினார். ஏற்கனவே பாஜக வலைதளத்தில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிந்தவாறு வெளியிட்ட புகைப்படத்தால் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், தற்போது அர்ஜூன் சம்பத் திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு அணிவித்தது மீண்டும் ஒரு பிரச்னையை கிளப்புமோ என்ற அச்சம் நிலவிவருகிறது.

திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்திய அர்ஜூன் சம்பத்

இதையும் படிங்க: இத்தனை நாள்களாக தலைவர்கள் சிலை... இன்று திருவள்ளுவர் சிலைக்கே இப்படியா!

Intro:தஞ்சாவூர் நவ 06

தஞ்சை பிள்ளையார்பட்டியில் அவமரியாதை செய்யப்பட்ட வள்ளூவர் சிலைக்கு காவி துண்டு திருநீறு ருத்ராட்சம் மாலை அணிவித்த அர்ஜுன் சம்பத்Body:
தஞ்சை பிள்ளையார்பட்டியில் நேற்று முந்தைய தினம் திருவள்ளுவர் சிலை மீது மர்ம நபர்கள் சிலர் மாட்டு சாணம் வீசி அவமரியாதை செய்து இருந்தனர். இது பல்வேறு தரப்பினரிடையே அதிர்ச்சியும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் சம்பவத்தை கண்டித்து சம்மந்தபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி பல்வேறு கட்சிகள் சார்பில் போராட்டம் நடைபெற்று வந்தது. இன்று ராஜராஜசோழன் சதய விழாவிற்கு மாலை அணிவிக்க வந்த இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத் அவமதிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு நெற்றியில் திருநீறு பூசி, ருத்ராட்சை மாலை காவி துண்டு அணிவித்து மரியாதை செலுத்தினார். ஏற்கனவே பாஜக வலைதளத்தில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிந்தவாறு வெளியிட்ட புகைப்படத்தால் சர்ச்சை எழுந்துள்ள நிலையில் தற்போது அர்ஜுன் சம்பத் திருவள்ளுவர் சிலைக்கு திருநீறு ருத்ராட்சம் மாலை மற்றும் காவி சால்வை அணிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதுConclusion:Tanjore sudhakaran 9976644011

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.