இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத், தஞ்சாவூரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்குத் திருநீறு பூசி, காவித் துண்டு அணிவித்ததைத் தொடர்ந்து, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக காவல் துறையினரால் கும்பகோணம் - உடையாளூர் அருகே கைது செய்யப்பட்டார்.
அவருடன் சேர்த்து அக்கட்சியின் மாநில இளைஞரணிச் செயலாளர் குருமூர்த்தி, தஞ்சை கார்த்திக் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக அவர் ராஜராஜசோழன் சமாதியில் உள்ள சிவலிங்கத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கட்சி நிர்வாகிகளுடன் வழிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு... அடுத்த பிரச்னையை கிளப்பிய அர்ஜூன் சம்பத்!