தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே புனல்வாசல் கிராமத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் விவசாயத் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்தக் கிராமத்தில் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக அந்தோணியார் பொங்கல் என்ற பெயரில் ஜனவரி 17ஆம் தேதி அதிகாலை ஒரே இடத்தில் 500க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ பெண்கள் பொங்கல் வைத்து, கால்நடைகளுக்குச் சிறப்பு வழிபாடு செய்வது வழக்கமாக இருந்துவருகிறது.
இதையொட்டி இன்று ஜனவரி 17ஆம் தேதி அதிகாலை 5 மணியளவில் புனித சவேரியார் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், கிராமத்தில் உள்ள 500க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே இடத்தில் பொங்கல் வைத்துக் கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு அப்பகுதியிலுள்ள அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அவர்கள் கூறுகையில், விவசாயிகளுக்கு கால்நடை மிக முக்கிய பங்கு வகிக்கின்றன என்றும் அதனால் கால்நடைகளைப் போற்றுவதற்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது என்கின்றனர்.
இதையும் படிங்க: காணும் பொங்கல் விழாவைக் கொண்டாடிய 101 இளம் பெண்கள்