ETV Bharat / state

மணல் கொள்ளையை தடுக்கும் அதிகாரிகள் மீது தொடர் தாக்குதல்.. தீர்வு கிடைப்பது எப்போது? - tamil news

தஞ்சையில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட வாகனத்தை தடுத்து நிறுத்த முயன்ற போலீசார் மீது வாகனத்தை மோதிவிட்டு தப்பிச் சென்றவர்களில் ஒருவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மணல் கொள்ளையை தடுக்கும் அதிகாரிகள் மீது தொடர் தாக்குதல் - இதற்கு தீர்வு தான் என்ன?

author img

By

Published : May 29, 2023, 7:15 PM IST

மணல் கொள்ளையை தடுக்கும் அதிகாரிகள் மீது தொடர் தாக்குதல் - இதற்கு தீர்வு தான் என்ன?

தஞ்சாவூர்: தமிழகத்தில் நாளுக்கு நாள் மணல் கொள்ளை அதிகரித்து வருவதாக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில், பட்டுக்கோட்டை பண்ணவயல் ரோடு பகுதியில் நேற்று இரவு (மே 28) பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீசாரான சரவணன் மற்றும் சதீஷ் இருவரும் இருசக்கர வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்தப் பகுதியில் டாடா வாகனம் ஒன்று வந்ததைத் தொடர்ந்து, அதை ஆய்வு செய்ய போலீசார் முயன்றுள்ளனர்.

அப்போது, அந்த வாகனத்திலிருந்தவர்கள் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக காவலர்களின் மீது மோதி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில் போலீசார் சரவணன் மற்றும் சதீஷ் காயமடைந்த நிலையில், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது அந்த வாகனத்தில் மணல் கடத்தப்பட்டு வந்ததும், அதை தடுத்து நிறுத்தியதால் போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதும் தெரிய வந்தது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், வாகனத்தின் உரிமையாளரான ராஜா என்பவரை கைது செய்து வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இருப்பினும் வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் நிசாந்த் தலைமறைவானார். எனவே, போலீசார் அவரை தேடும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இருப்பினும், மணல் கடத்தி சென்ற வாகனத்தை தடுத்த நிறுத்த முயன்ற போலீசார் மீது வாகனத்தை மோதி தப்பி சென்ற சம்பவம் தஞ்சாவூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் இது முதல் முறை அன்று. தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மணல் கொள்ளையில் ஈடுபடுவோரைத் தடுக்கும் அதிகாரிகள் தாக்கப்படுகின்றனர். கடந்த மாதம் தூத்துக்குடி மாவட்டத்தில் மணல் கடத்தலைத் தடுத்த வி.ஏ.ஓ மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி அவரை கொலை செய்து விட்டனர். அது தொடர்பான வழக்கும் நடைபெற்று வருகிறது.

மேலும், இதுபோல் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே நரசிங்கபுரம் கிராமத்தில் சட்ட விரோதமாக மணல் அள்ளுவதைத் தடுத்த வருவாய் ஆய்வாளர் பிரபாகரனை மர்ம கும்ப கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த வருவாய் ஆய்வாளர், துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து தகவல் அறிந்த திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் நடவடிக்கை எடுத்து வருவாய் ஆய்வாளரைத் தாக்கிய நரசிங்கபுரம் திமுக ஊராட்சி மன்ற தலைவர் மகேஷ், தனபால் மற்றும் மணி ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், தலைமறைவாக உள்ள கந்தசாமி என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் ஆறுகளில் குவாரி அமைத்து மணல் அள்ளுவதற்குத் தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. இதே போல் தஞ்சாவூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில், மூன்று இடங்களில் மணல் அள்ளுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எனவே, தஞ்சை மாவட்டம் கல்லணை அருகே மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கல்லணை அருகே மணல் அள்ளுவதால் கல்லணையின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும் என பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் டெல்டா மாவட்டத்தை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து கனிம வளங்கள் திருட்டைத் தடுக்க மணல் குவாரிகளுக்கு அனுமதி வழங்காமல் எம் சாண்ட் பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு அரசு கனிம வளங்கள் திருட்டைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இயற்கை வளங்களைப் பாதுகாக்கலாம் சுற்றுச்சூழலியல் ஆர்வலர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க: Breaking Bews: விழுப்புரம் அருகே தனியார் பேருந்து விபத்து: 30 பேர் படுகாயம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.