ETV Bharat / state

’கழுதையை குதிரை என்று நினைத்து ஏமார்ந்தேன்... அதிமுகவில் இணையத் தயார்’ - அமமுக புகழேந்தி

author img

By

Published : Nov 18, 2019, 4:39 PM IST

தஞ்சாவூர்: டிடிவி தினகரனின் கட்சி குதிரை என நினைத்து ஆதரவளித்ததாகவும், ஆனால் அது கழுதையாக இருக்கும் என்று தான் எதிர்பார்க்கவில்லை எனவும் அமமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

ammk spokesperson pugazhendhi pressmeet

தஞ்சாவூரில், அமமுக தஞ்சை மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அமமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி கலந்துகொண்டு நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “அமமுக கலைக்கப்பட்டுவிட்டது. அதிலுள்ள உறுப்பினர்கள் அனைவரும் அதிமுகவில் இணையப் போகிறார்கள். தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் ஓபிஎஸ், அமெரிக்காவிலிருந்து வந்த பிறகு சென்னையில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில், நாங்கள் அதிமுகவில் மிக விரைவில் இணையப் போகிறோம்.

அமமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி பேட்டி

உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக கட்சியில் இணைந்து பிரசாரத்தில் ஈடுபடவும் போகிறோம். டிடிவி தினகரனை குதிரை என்று நினைத்து, அமமுகவில் இணைந்தோம். ஆனால், இணைந்த பிறகுதான் தெரிகிறது அது குதிரை அல்ல கழுதை என்று. நாங்கள் தெரியாமல் தவறு செய்துவிட்டோம். அதிமுகவில் உள்ள அனைவரும் எங்களை ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறோம்” என்று கூறினார்.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தலில் அமமுக போட்டியிடுவதில் சிக்கல்!

Intro:தஞ்சாவூர் நவ 19

தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் அமெரிக்காவிலிருந்து வந்த பிறகு சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் அமமுகவில் இருந்து விலகிய தாங்கள் அதிமுகவில் மிக விரைவில் இணையப் போவதாக அமமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி பேட்டிBody:
தஞ்சாவூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தஞ்சை மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் கழக செய்தி தொடர்பாளர் புகழேந்தி கலந்துகொண்டு நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினர் அதைத்தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில் அமமுககட்சி கலைக்கப்பட்டது இதில் உள்ள உறுப்பினர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருப்பதாக கூறினார் மேலும் அவர்

தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் அமெரிக்காவிலிருந்து வந்த பிறகு சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் அமமுகவில் இருந்து விலகிய தாங்கள் அதிமுகவில் மிக விரைவில் இணையப் போவதாகவும். உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக கட்சியில் இணைந்து பிரசாரத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்தார். விக்கிரவாண்டி நாங்குநேரி தொகுதி வெற்றி போல அனைத்து தொகுதியிலும் வெற்றி பெறும்.
கஜா புயலுக்கு கட்சி நிர்வாகிகள் பல நலத்திட்ட உதவிகளை செய்தோம் தவிர பல அமமுக ஆயிரம் கோடி சொத்து வைத்துள்ள டிடிவி தினகரன் கஜா புயலுக்காக சொந்த செலவில் என்ன செய்தார்.
புறம்போக்கு இடத்தில் உள்ளது போல இருக்கும் கட்சியில் இருக்க பிடிக்காததால் அதிமுகவில் என்னைய உள்ளோம்
கட்சி தொடங்கிய காலத்திலிருந்து கட்சியில் இருக்கிறேன். கட்சியை அவர் நிறுவனமாக நடத்தி வருகிறார் எனவே இந்த நேரத்தில் இருந்து அமமுக கட்சியை நாங்களும் கலைத்து விடுகிறோம். என்று கூறினார்Conclusion:Tanjore sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.