இது தொடர்பாக தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,
உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு அதிமுக இல்லாமல் போய்விடும், அனைவரும் தங்கள் அணிக்கு வந்துவிடுவார்கள். உள்ளாட்சித் தேர்தலுக்குள் கட்சியை பதிவு செய்து நிலையான சின்னம் பெறப்படும். கட்சியைப் பதிவு செய்த பிறகு உறுப்பினர் அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகழேந்திக்கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை கலைப்பதற்கு யார் அதிகாரம் கொடுத்தது. அவருக்கு கொள்கை பரப்பு செயலாளர் கிடைக்காததாலும் ஓசூரில் தேர்தலின் போது அவருக்கு பணம் கிடைக்காததாலும் இது போல் பேசி வருகிறார்.
அமமுக கூடாரம் காலியாகி விட்டது என பல பேர் கூறி வருகிறார்கள். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இருக்கிறதா இல்லையா என்பதை உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு அனைவரும் பார்ப்பீர்கள். ஆளும்கட்சியான எடப்பாடி அணி படுதோல்வி அடையும். சசிகலா வெளியே வந்தவுடன் அதிமுகவில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும். இந்த ஆட்சி முடிந்த பிறகு கட்சியில் யாருமே இருக்க மாட்டார்கள் என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ‘நான்கு காலில் வந்து பதவியை பெற்ற அமைச்சர்கள்’ - டிடிவி தினகரன் சாடல்