தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையைக் கண்டித்து காந்தி பூங்கா முன்பு தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் இளங்கோவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விசிக மாநில துணைச் செயலாளர், அரசாங்கம் வழக்கறிஞர் அணி மாநில பொறுப்பாளர் நெப்போலியன், சிஐடியு தீண்டாமை ஒழிப்பு மாவட்டச் செயலாளர் சின்னை பாண்டியன், விடுதலை தமிழ் புலிகள் மாவட்டச் செயலாளர், தமிழ்நாடு குடியரசுக் கட்சி மாநிலத் தலைவர் எழிலன், சிகப்பு நதி குருதி மாவட்ட பொறுப்பாளர் சைமன், நீலப்புலிகள் இயக்கம் மாநிலச் செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்துகொண்டு, தகுந்த இடைவெளியுடன் புதிய கல்விக் கொள்கையைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.