ETV Bharat / state

ஆண்டிற்கு 15 நாட்கள் மட்டும் உருவமாக அருள்பாலிக்கும் ஆகாச மாரி - புஷ்ப பல்லாக்கில் எழுந்தருளும் சிறப்பு நிகழ்ச்சி! - aagasamaariyamman

ஆகாச மாரியம்மன் திருக்கோயில் ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, ஆகாச மாரியம்மன் புஷ்ப பல்லாக்கில் திருக்கோயிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

ஆண்டிற்கு 15 நாட்கள் மட்டும் உருவமாக அருள்பாலிக்கும் ஆகாச மாரியம்மன் புஷ்ப பல்லாக்கில் எழுந்தருளும் சிறப்பு நிகழ்ச்சி!

author img

By

Published : May 27, 2023, 5:57 PM IST

ஆண்டிற்கு 15 நாட்கள் மட்டும் உருவமாக அருள்பாலிக்கும் ஆகாச மாரியம்மன் புஷ்ப பல்லாக்கில் எழுந்தருளும் சிறப்பு நிகழ்ச்சி!

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகேயுள்ள நாச்சியார் கோயிலில், ஆண்டிற்கு 15 தினங்கள் மட்டும் உருவமாகவும், எஞ்சிய நாட்களில் அருவமாக விளக்கொளியில் அருள்புரியும், ஆகாச மாரியம்மன் திருக்கோயிலின் ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆகாச மாரியம்மன் புஷ்ப பல்லாக்கில் திருக்கோயிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இதில் ஏராளமான பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இக்கோயிலின் சிறப்பே, உருவ வழிபாடு இன்றி அருவமாக கருவறையில் ஒற்றை விளக்கை மட்டும் ஏற்றி வைத்து, அதனையே ஆகாச மாரியம்மனாக வணங்குவது தான். ஆனால், வைகாசி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் புதன்கிழமையில் காப்புக்கட்டி ஆண்டு திருவிழா 15 நாட்களுக்கு வெகு சிறப்பாக நடைபெறும்.

இத்திருவிழாவின் போது மட்டும் ஆகாச மாரியம்மனை, குடம் மற்றும் நாணல், தர்ப்பைபுல், பட்டு வஸ்திரங்கள், ஆடை ஆபரணங்களை கொண்டு உருவாக்குவார்கள். இத்திருவிழா நடைபெறும் 15 நாட்களும் சமயபுரத்து மாரியம்மனே இத்தலத்தில், ஆகாய மார்க்கமாக மல்லிகை பூ மற்றும் கை வளையல்களுக்கு ஆசைப்பட்டு இங்கு எழுந்தருளி அருள்பாலிப்பதாக ஐதீகம்.

இவ்வாண்டு இத்திருவிழா,கடந்த மே 24-ம் தேதி புதன் கிழமை காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நேற்று மே 26-ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு அரசலாற்றங்கரையில் இருந்து, செப்புக்குடத்தில் புனிதநீர் மற்றும் எலும்மிச்சை பழங்கள் போட்டு கரகமாக திருநரையூர் செங்கழுநீர் விநாயகர் கோயில் வரை எடுத்து வரப்பட்டது.

பின் அங்கு நாணல், தர்ப்பை புல், பட்டு வஸ்திரங்கள், ஆடை ஆபரணங்கள் கொண்டு, ஆகாச மாரியம்மனாக அலங்கரிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பல்வகை நறுமண மலர்களாலும், பல வண்ண மின் விளக்குகளாலும் விசேஷமாக அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லாக்கில் எழுந்தருளி, விடிய விடிய திருநரையூர், நாச்சியார்கோயில் முக்கிய வீதிகள் வழியாக, இன்று மே 27-ஆம் தேதி சனிக்கிழமை காலை திருக்கோயிலை வந்தடையும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

தொடர்ந்து, ஆகாசமாரியம்மன் பல்லாக்கில் இருந்து திருக்கோயிலுக்கு நாதஸ்வர மேள தாளம் முழங்க, சரம் சரமான கண்ணாடி கை வளையல்களை கொத்தாக கையில் ஏந்தி அம்மன் முன்னே வரவேற்றபடி செல்ல, தொடர்ந்து ஏராளமானோர் கூடை கூடையாக மல்லிகை உள்ளிட்ட பல்வகை நறுமண மலர்களை அம்மன் மீது தூவி, ஆடி அசைந்து வரும் மாரியம்மனை இரு புறமும் வெண்சாமரம் வீசி, தங்களது பிராத்தனைகளை அம்மன் விரைந்து நிறைவேற்றிட மனமுருக பிராத்தனை செய்தபடி மகிழ்வோடு வரவேற்றனர்.

இத்திருவிழாவினை முன்னிட்டு ஆகாசமாரியம்மனுக்கு நாளை மே 28-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் நாள்தோறும் லட்சுமி, சரஸ்வதி, மதனகோபாலன், மஹிஷாசுரவர்த்தினி, ஷேச சயனம் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அலங்காரத்தில் அருள்பாலிப்பார். அதனை தொடர்ந்து, முக்கிய நிகழ்ச்சியாக ஜூன் 2-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அம்மன் அந்தம் வரை வளர்ந்து, இராஜராஜேஸ்வரி அலங்காரத்திலும் சேவை சாதிப்பார்.

பின், ஜூன் 4-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பெரிய திருவிழாவும் அதனை தொடர்ந்து 7-ஆம் தேதி புதன்கிழமை இரவு ஆகாச மாரியம்மன் சிறிய தேரில் முக்கிய வீதிகள் வழியாக பவனி சென்று, சமயபுரத்திற்கு திரும்ப செல்லுதல் நிகழ்வுடன், இவ்வாண்டிற்காண விழா இனிதே நிறைவு பெறும். அதன் பிறகு கோயிலில் தொடர் வழிபாட்டிற்கு, கோயில் கருவறையில், ஏகாந்தமாக அணையா விளக்கை மீண்டும் ஸ்தாபித்து ஆண்டு முழுவதும் அதேயே ஆகாச மாரியம்மாக வழிபடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சின்னகானல் நோக்கி நகரும் அரிசிகொம்பன் காட்டு யானை! வாழ்விடம் நோக்கி பயணம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.