தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த இரகுநாதபுரம் பகுதியிலுள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு 299 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "எக்காரணத்தைக் கொண்டும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்கள் தமிழ்நாட்டில் அனுமதிக்கப்படமாட்டாது என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருக்கிறார். அதில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருக்கும்" என்று கூறினார்.
மேலும், "கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து முதலமைச்சர் விரைவில் அறிவிப்பை வெளியிடுவார். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப தேவையான இடத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: விரைவில் சிஏஏவிற்கு எதிராக தெலங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம்