தஞ்சாவூர்: திருவைக்காவூர் ஊராட்சியில் கொடிக்கம்பம் வைப்பது தொடர்பாக இரு சமூகத்தினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனைக் கண்டித்து ஒரு சமூகத்தினர் செப்.17ஆம் தேதி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடித்து வைத்தனர். இருப்பினும், இருதரப்பினரும் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
தகவலறிந்த காவலர்கள் சம்பவயிடத்திற்கு விரைந்து, பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போதும் கற்களை வீசி தகராறு நீடித்துள்ளது. இதனால், இரண்டு உதவி காவல் ஆய்வாளர்கள் உள்பட பலருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து பெரும் பதற்றம் நிலவியதன் காரணமாக, திருவைக்காவூர் ஊராட்சியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள், ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 2 மாதங்களுக்கு 144 தடை - டாஸ்மாக் மூடல்