ETV Bharat / state

Thanjavur Jail:தஞ்சாவூரில் அந்தமான் போன்ற சிறை - புனரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை - renovate the ancient Thanjavur Jail

தஞ்சாவூரில் பழமையான அந்தமான் சிறைச்சாலையை சீரமைக்கக் கோரி தமிழக அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 21, 2023, 8:58 PM IST

Thanjavur Jail:தஞ்சாவூரில் அந்தமான் போன்ற சிறை - புனரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

தஞ்சாவூர்: பிரிட்டிஷ் ஆட்சியில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக அதி தீவிரமான போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளை நாடு கடத்துவது அல்லது அந்தமான் சிறையில் அடைப்பது வழக்கமாக இருந்துள்ளது. இது தவிர அந்தப் பகுதியில் சிறைச்சாலைகளை கட்டியும் அடைக்கப்பட்டனர். இதற்காக தமிழ்நாட்டில் திருச்சி, தஞ்சாவூர், கோவை உள்ளிட்ட இடங்களில் 1885ஆம் ஆண்டு சிறைச்சாலைகள் கட்டப்பட்டன.

இதில் தஞ்சாவூரில் ராமநாதன் ரவுண்டானா அருகே தற்போது உள்ள தெற்கு காவல் நிலையம் எதிரில், 52 ஏக்கர் பரப்பளவில் அக்காலத்தில் கட்டிய சிறைச்சாலை உள்ளது. அந்தமான் சிறைச்சாலை போன்று காணப்படும் இந்த சிறைச்சாலை சூரிய கதிர்கள் விரிவடைவதை போன்று எட்டு நிலைகளாக கட்டப்பட்டுள்ளது.

தனித்தனி சிறை அறைகளைக் கொண்ட ஒவ்வொரு நிலையையும் தாண்டி கண்காணிப்பு கோபுரம் நம்மை அண்ணாந்து பார்க்க வைக்கிறது. அவ்வப்போது இந்த சிறைச்சாலை விரிவுபடுத்தப்பட்டு வந்த நிலையில், இந்த சிறைச்சாலையின் நுழைவுவாயிலில் அருகே 1905ஆம் ஆண்டு தரைத்தளம் மற்றும் முதல் தளங்கள் என தலா 10 அறைகள் கொண்ட சிறைச்சாலைகளும் கட்டப்பட்டன.

இதன் நேர் எதிராக, தலா 5 அறைகள் கொண்ட கட்டடங்களும் கட்டப்பட்டன. சிறைச்சாலையை சுற்றிலும் 20 அடி உயரமும் இரண்டு அடி அகலத்திலும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளன. செங்கல் மற்றும் கருங்கல்லில் கட்டப்பட்ட இந்த சிறைச்சாலையில் ஒவ்வொரு அறையும் 8 அடி அகலமும் 15 அடி நீளமும் கொண்டுள்ளது. அறையின் முகப்பில் 2 அடி அகலம், 7 அடி உயரத்தில் உள்ளே செல்ல இரும்புக் கம்பிகளுடன் கூடிய கதவுகள், பின்புறத்தில் ஜன்னல் மற்றும் அதே அறையில் கழிவறை வசதியும் அமைக்கப்பட்டுள்ளது.

அக்காலத்தில் தஞ்சாவூர் பகுதியில் சுதந்திரத்திற்காக போராடியவர்கள், இச்சிறைச்சாலையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்யப்பட்டனர். இவர்களில் உயிரிழந்தவர்களும் ஏராளம். உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் போலீசார் கைது செய்து இந்த சிறைச்சாலையில் தான் அடைத்தனர்.

மூதறிஞர் ராஜாஜி, 'உப்பு சத்தியாகிரகம்' மேற்கொண்டபோது, வேதாரண்யத்திற்குச் செல்லும் வழியில் கைது செய்யப்பட்டு இந்த சிறையில் தான் அடைக்கப்பட்டு இருந்தார். இதனால், அவரது நினைவாக இவ்வளாகத்தில் ராஜாஜி அரசு நடுநிலைப்பள்ளி தற்போதும் செயல்பட்டு வருகிறது. ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட சிறைச்சாலை, நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பாஸ்டல் பள்ளியாகவும், அதன் பின்னர் சிறுவர்கள் சீர்திருத்தப் பள்ளியாகவும் மாற்றப்பட்டது.

தற்போது சிறுவருக்கான அரசினர் குழந்தைகள் இல்லம் என்ற பெயரில் இயங்கி வருகிறது. இதில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு தண்டனை பெறும் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் அடைக்கப்படுகின்றனர். இதில் பயன்படுத்தப்படாத சிறைச்சாலையில் உள்ள அறைகள் அனைத்தும் புதர்கள் மண்டியும் சிதிலமடைந்தும் காணப்படுகின்றன. அந்தமான் சிறையானது, இந்த தஞ்சாவூர் சிறைச்சாலையை முன்மாதிரியாகக் கொண்டுதான் அக்காலத்தில் அமைக்கப்பட்டது எனவும் கூறப்படுகிறது.

தற்போது, 75ஆவது சுதந்திர தினம் கொண்டாடிய நிலையில் இந்தப் பழமையான சிறைச்சாலையை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும், 138 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள சிறைச்சாலையை சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளை போற்றும் வகையிலும், அவர்களை வருங்கால தலைமுறையினருக்கு நினைவுப்படுத்தும் விதமாகவும் புதுப்பித்து பாதுகாக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆகவே, இந்த சிறைச்சாலையை அதன் பழமை மாறாமல் புனரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: 50,000 பேர் கூட வசிக்கவில்லை: உலகின் 'தம்மாதூண்டு' நாடுகள் தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.