ETV Bharat / state

போஸ்ட் ஆபிஸில் நூதன முறையில் ரூ.1 கோடி மோசடி.. தஞ்சை உடையளூரில் பரபரப்பு! - 1 கோடி மோசடி

கும்பகோணம் அடுத்த உடையளூரில் உள்ள அஞ்சலகத்தில், அஞ்சல் அலுவலராக பணிபுரியும் வினோத் (40). 7-க்கும் மேற்பட்ட கிராம மக்களிடம் இருந்து பெறப்பட்ட பணத்தை அவர்களது கணக்கில் செலுத்தாமல் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்ததாக பொதுமக்கள் கண்ணீர் மல்க புகார் தெரிவித்துள்ளனர்.

போஸ்ட் மாஸ்டர் 1 கோடி மோசடி
போஸ்ட் மாஸ்டர் 1 கோடி மோசடி
author img

By

Published : Jul 15, 2023, 7:34 PM IST

போஸ்ட் மாஸ்டர் மோசடி தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறிய கருத்துக்கள்

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே உள்ள உடையளூர் அஞ்சலகத்தில், அஞ்சல் அலுவலராக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருபவர் கோவிந்தகுடியை சேர்ந்த வினோத் (40). இந்த அஞ்சலகத்தில், தேனாம்படுகை, உடையளூர், கொட்டியபடுகை, ஆண்டித்தோப்பு, பழையாறை, மண்டகமேடு, தில்லையம்பூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அஞ்சலகத்தின் பல்வேறு திட்டத்தில் பணத்தை சேமித்து வருகின்றனர்.

கடந்த 5 ஆண்டுகளாக உடையளூர் அஞ்சலகத்தில், செல்வமகள் சேமிப்பு திட்டம், நிரந்திர வைப்பு நிதி, காப்பீடு திட்டம், ரிக்கரிங் டெபாசிட்(Recurring Deposit), சேமிப்பு கணக்கு, ஆகிய திட்டத்தின் கீழ் மக்கள் செலுத்திய பணத்தை சம்மந்தபட்டவர்கள் கணக்கில் வரவு வைக்காமல், கணக்கு புத்தகங்களில் போலியாக தொகை வரவு வைக்கப்பட்டதை போல எழுதி, ரப்பர் ஸ்டாம்புகள் உள்ளிட்ட அரசு ஆவணங்களை போலியாக தயார் செய்து, போலியாக காப்பீடு பாண்டுகள் தயார் செய்து, அதை பொது மக்களுக்கு வழங்கி, அந்த தொகையை கையாடல் செய்து அஞ்சல் அலுவலர் வினோத் மோசடி செய்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த அஞ்சலகத்திற்கு உயர் அலுவலர் ஆய்விற்கு வந்த போது, அந்த கிராமத்தை சேர்ந்த ஒரு பெண் கொண்டு வந்த அஞ்சலக சேமிப்பு கணக்கு புத்தகத்தை வாங்கி பார்த்துள்ளார். அப்போது அவரது கணக்கு புத்தகத்தில் குறிப்பிட்ட தொகை அஞ்சலக கணக்கில் வரவு வைக்காமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அஞ்சல் அலுவலர் வினோத்தின் மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.

இந்த மோசடி குறித்து அறிந்த வலங்கைமான் அஞ்சல் துறை ஆய்வாளர் முரளி தலைமையிலான குழு, இன்று (ஜூலை 15) உடையாளுர் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தில் முகாமிட்டு, பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரையும் வரவழைத்து, அவர்கள் வைத்துள்ள ஆவணங்களில் குறிப்பிட்டுள்ள தொகையையும், அஞ்சலக ஆவணங்களில் உள்ள தொகையையும் ஒப்பிட்டு பார்த்துள்ளனர்.

அதில் வித்தியாசமாக பதியப்பட்டுள்ள தொகைகள் குறித்து, கணகெடுத்து வருகின்றனர். இன்று மாலை அல்லது நாளை தான் வினோத் செய்த மோசடியால் பாதிக்கப்பட்ட நபர்கள் எத்தனை பேர், கையாடல் செய்யப்பட்ட தொகை எவ்வளவு என்பது முழுமையாக தெரியவரும் என தகவல் கிடத்துள்ளது. இதுவரை பத்து கிராமங்களை சேர்ந்த, சுமார் ஆயிரம் நபர்களிடம் கிட்டதட்ட ஒரு கோடி ரூபாய் அளவிற்கு வினோத் கையாடல் செய்திருக்க கூடும் என தெரியவருகிறது. இது தவிர வினோத் உடையளூரில் ஒரு சிலரிடம் 25 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்று இருப்பதும் தெரியவந்துள்ளது.

கோவிந்தகுடியில் மோசடி செய்த பணத்தை கொண்டு புதிய வீடு கட்டியிருப்பதாகவும், புதிதாக பல சொத்துக்கள் வாங்கி இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இவ்வளவு தொகை மோசடி செய்தும், தனி நபர்களிடம் கடன் பெற்றுவது குறித்தும், இவர் வேறு யாரிடமாவது ஏமாந்து உள்ளாரா? அல்லது சொத்துக்களாக உள்ளதா என்பவை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

பூவிற்கும் அன்னமேரி என்பவர் தனது இரு கணக்குகளில் ரூபாய் 2 லட்சத்தி 50 ஆயிரம் ரூபாயும், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் என்பவர் நிரந்திர வைப்பு (fixed deposit) நிதியாக செலுத்திய 8 லட்ச ரூபயும் அஞ்சல் கணக்கில் செலுத்தாமல் மோசடி செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த மோசடி சம்பவம் உடையளூர் கிராம மக்களிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு கருதி முன்னச்சரிக்கையாக பட்டீஸ்வரம் காவல் நிலைய போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: Aarudhra Scam: ட்விட்டர் பதிவால் மாட்டிக்கொண்ட ஆர்.கே சுரேஷ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.