ETV Bharat / state

வீட்டின் அருகே தானே வெடிகுண்டு வீசிய இந்து முன்னணி பிரமுகர் கைது

கும்பகோணம் இந்து முன்னணி மாநகர செயலாளர் சக்கரபாணி போலீஸ் பாதுகாப்பு கிடைக்கும் என்ற பேராசையில் மர்ம நபர்கள் தனது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக நாடகம் நடத்தியது விசாரணையில் அம்பலமானது.

போலீஸ் பாதுகாப்புக்கு ஆசைப்பட்டு இந்து முன்னணி பிரமுகர் நடத்திய வெடிகுண்டு நாடகம்

author img

By

Published : Nov 21, 2022, 11:08 PM IST

Updated : Nov 22, 2022, 7:27 AM IST

தஞ்சாவூர்: கும்பகோணம் மேலக்காவேரி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சக்கரபாணி, இந்து முன்னணி அமைப்பின் மாநகரச் செயலாளராக கடந்த 5 ஆண்டுகளாக இருந்து வருகிறார்.

நேற்று காலை பலத்த சத்தத்துடன் தனது வீட்டின் வாசலில், மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றதாக காவல் துறையினருக்கும், இந்து முன்னணி நிர்வாகிகளுக்கும், இந்து அமைப்பின் முக்கியப் பிரமுகர்களுக்கும் தகவல் தந்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து தஞ்சை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன், தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட உயர் காவல் அலுவலர்கள் நேரில் வந்து சம்பவ இடத்தை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர் சக்கரபாணியிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

போலீஸ் பாதுகாப்புக்கு ஆசைப்பட்டு இந்து முன்னணி பிரமுகர் நடத்திய வெடிகுண்டு நாடகம்

இதுகுறித்து அப்போது பேட்டி அளிக்க மறுத்து, அங்கிருந்து விரைந்து புறப்பட்டு சென்றபின் இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர், இந்தச் சம்பவம் இந்து அமைப்புகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நடந்துள்ளது என பேட்டியளித்தனர். மேலும் தஞ்சையில் இருந்து தடய அறிவியல் நிபுணர் குழு, போலீஸ் தனிப்படையினர் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தஞ்சையில் இருந்து மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட சக்கரபாணியிடமும் போலீசார் தொடர்ந்து கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணையில், சக்கரபாணியே தன்னுடைய சுய விளம்பரத்திற்காக, மர்ம நபர்கள் தனது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக நாடகம் நடத்தியது தெரியவந்தது.

குறிப்பாக, வெடிபொருட்களை ஆய்வு செய்தபோது அதில் பயன்படுத்தப்பட்ட திரி, சக்கரபாணி வீட்டில் இருந்த துணியில் இருந்து தயாரிக்கப்பட்டதும் போலீசாரின் விசாரணையிலும், ஆய்விலும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசாரின் விசாரணையில் சக்கரபாணி ஒப்புக்கொண்டதை தொடர்ந்து அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் அரங்கேறினால், பல இந்து அமைப்பின் பிரமுகர்களுக்கு வழங்குவது போல தனக்கும் போலீஸ் பாதுகாப்பு கிடைக்கும் என்ற பேராசையில் சக்கரபாணி இப்படி ஒரு சம்பவத்தை அரங்கேற்றி, அதில் அவரே சிக்கிக் கொண்டார்.

இந்திய தண்டனைச் சட்டம் 53, 153, 153A , 504, 505 (2), 436 ஆகிய ஆறு பிரிவுகளின் கீழ் இந்து முன்னணி கும்பகோணம் மாநகர செயலாளர் சக்கரபாணி மீது‌ வழக்கு பதிந்து, கும்பகோணம் கிழக்கு காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

தன் வீட்டில் தானே பெட்ரோல் குண்டு வீசி, நாடகமாடி, தனக்கு பெருமை கொள்வது, சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்துதல் மற்றும் மத கலவரத்தை தூண்டுதல் நோக்கத்துடன் செயல்பட்டதாக கூறி மேற்படி ஆறு பிரிவுகளில் கைது செய்யப்பட்டு நேற்றிரவு கும்பகோணம் நீதிபதிகள் குடியிருப்பில் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் முன்பு ஆஜர் செய்யப்பட்டார்.

சக்கரபாணியை வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனைத்தொடரந்து அவர் கும்பகோணம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: கல்லூரி மாணவர் ரயில் மோதி உயிரிழப்பு

Last Updated : Nov 22, 2022, 7:27 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.