ETV Bharat / state

பள்ளி மாணவர்களுக்கு இலவச 'Violin Class' - 75 வயது இசைக் கலைஞர் அசத்தல்

தஞ்சாவூரில் 75 வயது இசைக்கலைஞர் ஒருவர், பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வயலின் இசையை கற்றுத்தந்து வருகிறார்.

Etv Bharat பள்ளி மாணவர்களுக்கு இலவச வயலின் வகுப்பு

author img

By

Published : Jan 4, 2023, 4:40 PM IST

பள்ளி மாணவர்களுக்கு இலவச வயலின் வகுப்பு

தஞ்சாவூர்: இசைக் கருவிகளில் ஒன்றான வயலின் இசையை தஞ்சையைச் சேர்ந்த மூத்த வயலின் இசைக்கலைஞர் நடராஜன் (75) என்பவர் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை நாட்களில் இலவசமாக கற்றுத் தருகிறார். பாரம்பரியமாக உள்ள இந்த வயலின் இசையை வாசிப்பவர்கள் தஞ்சையில் அரிதாகிவிட்ட காலத்தில் இக்கலையை மீட்டுருவாக்கம் செய்யும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு இசைப்பயிற்சி கற்றுத் தருகிறார்.

இவர் பிரபல இசைக்கலைஞர் டிஆர் பாப்பாவின் உறவினர் ஆவார். மாணவர்களும் விடுமுறை நாட்களில் ஆர்வமுடன் வந்திருந்து வயலின் இசையைக் கற்று வருகின்றனர். இதுகுறித்து வயலின் இசைக்கலைஞர் நடராஜன் கூறும்போது, 'தஞ்சாவூரில் வயலின் இசைக்கலைஞர்கள் 20-க்கும் மேற்பட்டவர்கள் வயலின் வாசித்த நிலையில் தற்போது ஒரு சிலரே உள்ளனர்.

ஆகவே இக்கலையை இளைய தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு கற்றுத் தருகிறேன். மேடை கச்சேரிகள் குறைந்துள்ள நிலையில் இந்த கலை மறைந்துவிடும் நிலையில் உள்ளதால் இதை மாணவர்களுக்கு இலவசமாக கற்றுத் தருகிறேன்’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சிலம்பம்: உலகக்கோப்பைக்கு தேர்வான கும்மிடிப்பூண்டி கல்லூரி மாணவி தமிழினி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.