தஞ்சாவூர்: திருவையாறு பகுதியில் கஞ்சா விற்பதாக வந்த ரகசிய தகவலின் பேரில் திருவையாறு காவல் உதவியாளர் ஞானமுருகன் அப்பகுதிக்குச் சென்று சோதனை செய்தார். அந்தச் சோதனையில் திருவையாறு அடுத்த நடுக்கடை பகுதியை சேர்ந்த சரவணன் (38), சாகுல்ஹமீது (33), கார்த்திக் (25), அப்துல்ஹமீது (23), அரவிந்தன் (23), வரதராஜன் (20) ஆகிய 6 பேரும் கஞ்சா விற்றது தெரிய வந்தது.
கையும் களவுமாக பிடிப்பட்ட ஆறுபேரையும் கைது செய்த திருவையாறு காவல் துறையினர் அவர்களிடம் இருந்து தலா 100கி கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். கைதான ஆறு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.