தஞ்சாவூர்: கரோனா தொற்றுப் பரவலால் ஏற்படும் உயிரிழப்பு வெகுவாக குறைந்து வந்தது. கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் தொற்றுப் பரவலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வந்தது.
தஞ்சையில் நேற்று முன்தினம் (ஜூலை 1) 248 பேரும், நேற்று (ஜூலை 2) 239 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் 23 பேரும், நேற்று 30 பேரும் என மொத்தம் 53 பேரும் கரோனாவால் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தஞ்சை மாவட்டத்தின் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் பேசுகையில் , “பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கரோனாவை குறைக்க முடியாது. அவசியம் இருந்தால் மட்டுமே பொதுமக்கள் வெளியே வர வேண்டும். முகக்கவசம் அணிந்து தகுந்த இடைவெளியை பின்பற்ற வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: குறையும் கரோனா பாதிப்பு - பள்ளிகளை திறக்க கோரிக்கை