தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த கரையூர் தெரு பகுதி மீனவர்கள் நேற்று மாலை கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இந்நிலையில் இன்று காலை ஏழு மணி அளவில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அதிவேக சூறைக்காற்று வீசி ராட்சச அலைகள் எழுந்தன. இதனால் படகு நிலை தடுமாறி கடலுக்குள் கவிழ்ந்தைதக் கண்டு சுதாரித்துக் கொண்ட மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்பினர்.
சூறைக்காற்றில் கவிழ்ந்த படகில் பழனிவேல், சுப்பிரமணியன் பாலச்சந்தர், ஆறுமுகம் ஆகியோர் படகை பிடித்துக்கொண்டு நீண்ட நேரம் கடலில் தத்தளித்தனர். இதைக்கண்ட சக மீனவர்கள் அவர்களை மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர். அதேவளையில், மற்றொரு படகு கவிழ்ந்ததில் கிருஷ்ணமூர்த்தி, கணேசன், வெங்கடேஷ், நாகராஜன், அய்யப்பன் ஆகியோர் சென்ற படகு கவிழ்ந்துவிட்டது என கடலோரக் காவல் படையினர், மீன்வளத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, கடலோரக் காவல் படையினர் ஐந்து மீனவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அப்பகுதியில் தொடர்ந்து சூறைக் காற்று வீசி வருவதால் 1300க்கும் மேற்பட்ட ஃபைபர் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.