ETV Bharat / state

தமிழ்நாடு முழுவதும் 2,500 பள்ளிகள் மரத்தடியில் இயங்குகிறது - அமைச்சர் அன்பில் மகேஷ் - Ministry of school education

தமிழ்நாடு முழுவதும் 2,500 பள்ளிகள் மரத்தடியில் இயங்கி வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் 2,500 பள்ளிகள் மரத்தடியில் இயங்குகிறது - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

author img

By

Published : Jul 5, 2022, 8:01 PM IST

தஞ்சாவூர்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இன்று காலை முதல் தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரத்தநாடு, திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய சட்டமன்ற தொகுதியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம், அங்கன்வாடி மையம், மாதிரி நூலகம் என பல்வேறு விதமான கட்டடங்கள் மற்றும் வசதிகளை திறந்து வைத்தார்.

இதன் ஒரு பகுதியாக, கும்பகோணம் தொகுதிக்குட்பட்ட நீரத்தநல்லூர் ஊராட்சி பகுதியில் ரூ.10,94,000 மதிப்பீட்டில் அமைந்துள்ள புதிய அங்கன்வாடி கட்டிடத்தை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில், அமைச்சர் அன்பில் மகேஷ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முழுவதும் 2,500 பள்ளிகள் மரத்தடியில் இயங்குகிறது - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “உயர்கல்வியில், அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் கல்வி பயின்ற மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஓதுக்கீடு குறித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது அரசு பொதுத்தேர்வு எழுதிய மாணவ மாணவியர்களுக்கு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.

கல்லூரிகள் ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக அனைவருக்கும் மதிப்பெண் பட்டியல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 13,331 தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில், 25 மாவட்டங்களுக்குட்பட்ட சுமார் 11,000 ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு கிளியரன்ஸ் பெற்றுள்ளோம்.

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், 10 மாவட்டங்களுக்குட்பட்ட சுமார் 2,000 ஆசிரியர் பணி நியமனங்களுக்கு கிளியரன்ஸ் வாங்க வேண்டியுள்ளது. இதற்காக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவினை தாக்கல் செய்துள்ளோம். எனவே இவ்வழக்கு வரும் ஜூலை 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் விசாரணைக்கு வருகிறது. அப்போது அதிலும் கிளியரன்ஸ் பெறுவோம் என நம்புகிறோம்.

தமிழ்நாடு முழுவதும் 2,500 பள்ளிகள் மரத்தடிகளில் இயங்கி வருவதை கண்டறிந்துள்ளோம். அவை ஒன்றாக சிஎஸ்ஆர், மாவட்ட ஆட்சியர் நிதி, மக்கள் பிரதிநிதிகளின் நிதி, ரூ.1,300 கோடி நபார்டு நிதி உள்ளிட்ட பல்வேறு நிதியுதவிகளை பயன்படுத்தி புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்ட விரைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் அரசு தலைமை கொறடா கோவி செழியன், ராஜ்யசபா எம்.பி எஸ்.கல்யாணசுந்தரம், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம், கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன், கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் காயத்ரி அசோக்குமார், கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் சு.ப.தமிழழகன் மற்றும் கும்பகோணம் கோட்டாட்சியர் லதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: இளைஞர்களை தவறாக வழிநடத்துவதாக எழுந்த குற்றச்சாட்டு உண்மையல்ல - TTF வாசன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.