தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே திருச்செனம்பூண்டி சாள்வன் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி மகன் காமராஜ் (59). இவரது அண்ணன் மகன் வெற்றிவேலின் மகள் ரஞ்சினியை காமராஜ் வளர்த்து வருகிறார். கடந்த 14ஆம் தேதி தீபாவளி என்பதால், காலை 11 மணியளவில் எதிர்வீட்டில் வசித்து வரும் முருகானந்தம் மகன்கள் விஸ்வா (16), மிதுன் (18) ஆகிய இருவரும் அப்பகுதியில் வெடி வெடித்துள்ளனர்.
இந்நிலையில், ரஞ்சனி இருவரிடமும் தூரமாகச் சென்று வெடி வெடிக்க கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் மறுநாள் (நவ.15) காலை முருகானந்தம், விஷ்வா, மிதுன், அர்ஜுன், விக்ரம், வினித் குமார், வினித், ரமணி, அருண் குமார், அஜித்குமார், மோகன் ஆகியோர் காமராஜ் வீட்டிற்குள் சென்று கட்டை மற்றும் அரிவாளுடன் காமராஜை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினர். அப்போது ரஞ்சனியை அரிவாளால் தலையில் வெட்டிவிட்டு தப்பியோடினர்.
இதில் பலத்த காயமடைந்த ரஞ்சனி கீழே விழுந்து மயக்கமடைந்தார். இதனையடுத்து காயமடைந்த காமராஜ், ரஞ்சனி ஆகிய இருவரும் திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருக்காட்டுப்பள்ளி காவல் ஆய்வாளர் ஸ்ரீதேவி, தாகூர் காவல் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் காமராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து 11 பேரையும் கைது செய்தனர்.
இதையும் படிங்க: அரசு மருத்துவக்கல்லூரியில் சேர கட்ஆப் மதிப்பெண் எவ்வளவு?