சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீப் (வயது 25) என்பவர், தென்காசி மாவட்டம் இலஞ்சியில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. தென்காசி அருகேயுள்ள குத்துக்கல் வலசையில் நேற்று (மே 22) பிரதீப் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது ஏற்பட்ட மோதலில், பிரதீப் வெட்டிக் கொலை செய்யப்பட்டதாக தென்காசி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற காவல்துறையினர், சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், பிரதீப் தனது நண்பர்களுடன் மது அருந்திய போது தகராறு ஏற்பட்டு கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணத்துக்காக திட்டமிட்டு கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தப்பியோடியவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: உறவினர்களுக்கு இடையே தகராறு: குழந்தைகளுக்கு அரிவாள் வெட்டு