தென்காசி மாவட்டம் வீரசிகாமணியை சேர்ந்த ஆறுமுகசாமி என்பவரது மகன் முத்துக்குமார்(22). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த 27ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, புளியங்குடி தனியார் கல்லூரியில் உள்ள முகாமில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். ஏழு நாள்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த முத்துகுமார், குணமடைந்து நாளை மறுநாள் (ஆகஸ்ட் 6) வீடு திரும்ப இருந்தார்.
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 4) காலை கரோனா முகாமில் உள்ள அவரது அறையில் மின் விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது முகாமில் இருந்த சக நோயாளிகள், மருத்துவ பணியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து புளியங்குடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் வாசுதேவநல்லூர் தனியார் கல்லூரியில் கரோனா சிகிச்சைப் பெற்று வந்தவர் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க; தற்கொலை செய்து கொள்வதாக மீன் வியாபாரி சமூக வலைதளங்களில் காணொலிப் பதிவு!