ETV Bharat / state

தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு யோகாசனப் பயிற்சி.! - Yoga practice to relieve stress to Orphans

திருநெல்வேலி: ஆதரவற்று வீதியில் சுற்றியவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாமில் அவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் யோகாசனப் பயிற்சி அளிக்கப்பட்டது.

தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு யோகாசனப் பயிற்சி.

author img

By

Published : Apr 30, 2020, 8:35 PM IST

கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து மாநகர பகுதியில் சுற்றித் திரியும் ஆதரவற்றோர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் உணவின்றி மேலும் பாதிப்புக்குள்ளாகி விடக்கூடாது என்பதற்காக மீட்கப்பட்டு திருநெல்வேலி மாநகராட்சி மற்றும் தன்னார்வ அமைப்பு சார்பில் அவர்கள் திருநெல்வேலி டவுன் கல்லணை மாநகராட்சிப் பள்ளியில் தற்காலிக முகாம் அமைத்து தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட சுமார் 120 பேர்களுக்கு புத்தாடைகளும், அரசியல் அமைப்புகள், தன்னார்வ அமைப்புகள் சார்பில் மூன்று வேளை உணவும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வெளியில் சுற்றித் திரிந்தவர்கள் முகாமில் அடைபட்டு இருப்பதால் மன அழுத்தம் ஏற்படக் கூடாது என்பதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு யோகாசனப் பயிற்சி.

கடந்த வாரம் திறந்தவெளியில் திரைப்படம் காண்பிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக முகாமில் உள்ளவர்களுக்கு மனவளக்கலை மன்றம் சார்பில் யோகாசனப் பயிற்சி, மன அழுத்தத்தை போக்கும் அடிப்படை பயிற்சிகளான மூச்சுப் பயிற்சி, ரத்த ஓட்டத்திற்கான பயிற்சி ஆகியவை அளிக்கப்பட்டன. இந்த பயிற்சிகளில் முகாமில் இருந்தவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பயிற்சி செய்தனர்.

இதையும் படிங்க:

யோகாசனத்தில் உலகச் சாதனைபுரிந்த பொள்ளாச்சி பள்ளி மாணாக்கர்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.