தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஆர்.சி. சர்ச் தெரு நத்தம் பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. இங்கு கடந்த 9 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு 11.40 மணியளவில், பெண்ணின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனைக் கேட்ட அதே தெருவில் வசிக்கும் லெட்சுமி என்ற பெண், தனது கணவருடன் வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்துள்ளார்.
அடுத்த சிறிது நேரத்தில் அந்த பெண்ணின் குரல் அடங்கியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் இருந்தனர். இந்நிலையில், அதே பகுதியில் வசிக்கும் பெண்ணை மின்சாரம் தாக்கியதால் அலறிய சத்தமே நள்ளிரவில் கேட்டது தெரிய வந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: சங்கரன்கோவில் அருகே லாரி மோதி இரண்டு வாலிபர்கள் உயிரிழப்பு