ETV Bharat / state

திருமணத்தை மீறிய உறவு: இரண்டாவது கணவரை கொலை செய்த மனைவி கைது! - தென்காசி மாவட்ட செய்திகள்

தென்காசி: திருமணத்தை மீறிய உறவைத் தட்டிக் கேட்ட இரண்டாவது கணவரை கொன்று புதைத்த மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்தவரை கொன்ற பெண்

author img

By

Published : Apr 17, 2021, 10:47 PM IST

தென்காசி மாவட்டம் குத்துகல்வலசை அருகே அண்ணாநகரைச் சேர்ந்தவர் அபி என்ற அபிராமி (33). இவர் சொந்தமாக அழகுநிலையம் வைத்துள்ளார். இவரது முதல் கணவர் இறந்த நிலையில், கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக, காளிராஜ்(19) என்ற மெக்கானிக்கை இரண்டாவதாக திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. ஒருவருடம் இவர்கள் சேர்ந்து வாழ்ந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த மூன்று வருடமாக தன் மகன் வீட்டிற்து வராத காரணத்தால், மகனை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் இளைஞரின் தாய் தென்காசி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதனடிப்படையில், காவல் துறையினர் அபிராமியிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. காளிராஜூடன் வாழ்ந்து வந்த நிலையில் அபிராமிக்கு மாரிமுத்து என்பவருடன் புதிதாக உறவு ஏற்பட்டுள்ளது. அதனை காளிராஜ் கண்டித்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அபிராமி, மாரிமுத்துவுடன் சேர்ந்து மூன்று வருடங்களுக்கு முன்பு காளிராஜைக் கொன்று, தனது வீட்டின் அருகே இருந்த தென்னை மரத்தின்கீழ் புதைத்துள்ளனர் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, சம்பவயிடத்திற்கு சென்ற தென்காசி காவல் துணை கண்காணிப்பாளர் கோகுலகிருஷ்ணன், காவல் ஆய்வாளர் பாலமுருகன் ஆகியோர் ஜேசிபி இயந்திரம் கொண்டு இளைஞர் புதைக்கப்பட்ட இடத்தை தோண்டினர். அந்த இடத்தில் காளிராஜின் எலும்புக் கூடு இருந்தது.

இதனைத் தொடர்ந்து அபிராமி, மாரிமுத்து ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க: திருப்பூரில் ரவுடியை கத்தியால் குத்தி கொல்ல முயற்சி: சிசிடிவி வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.