ETV Bharat / state

விடிய விடிய பெய்த கனமழை கண்மாய் நிரம்பி ஊருக்குள் புகுந்த வெள்ளம்..! - சங்கரன்கோவில் அருகே வெள்ளம்

தொடர் கனமழையால் சங்கரன்கோவில் பகுதியில் உள்ள கண்மாய் நிரம்பி, அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், மக்களின் இயல்பு நிலை மிகவும் பாதிப்படைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடிய விடிய பெய்த கனமழை ஊருக்குள் புகுந்த வெள்ளம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 18, 2023, 4:05 PM IST

விடிய விடிய பெய்த கனமழை ஊருக்குள் புகுந்த வெள்ளம்

தென்காசி: தமிழகத்தின் தென் மாவட்டங்களில் 24 மணி நேரத்தைக் கடந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் இருக்கும் நீர் நிலைகள் நிரம்பி, குடியிருப்பு பகுதிகள் மழை நீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதித்துள்ளது.

அந்த வகையில், சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று (டிச.17) இரவு முதல் லேசான முதல் மழை பெய்து வந்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் மலைப்பகுதி அடிவாரப் பகுதியிலான புளியங்குடி, சிந்தாமணி போன்ற பகுதிகளில் கனமழை பெய்தது.

இதனால் அப்பகுதியில் உள்ள குளங்கள் வேகமாக நிரம்பி, மறுகால் பாய்ந்து ஓடைகள் மூலமாக சங்கரன்கோவில் பகுதியில் உள்ள கண்மாய்க்கு வந்தது. அதனை அடுத்து சங்கரன்கோவில் பகுதியில் உள்ள கண்மாயும் அதன் முழு கொள்ளளவை எட்டி மறுகால் பாய்ந்து வருகிறது.

இதையும் படிங்க: குடியிருப்புகளை சூழும் வெள்ளம் - தென்காசி ஆட்சியர் கொடுத்த அலெர்ட்

இந்நிலையில், சங்கரன்கோவில் கண்மாய் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான பாட்டத்தூர், தளவாய்புரம் ஆகிய கிராமங்களின் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. மேலும், தாழ்வான பகுதியில் உள்ள வீடுகள் வெள்ள நீரில் மூழ்கும் அபாய நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள், தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்காகக் கூட வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலையில் தவிக்கின்றனர். மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் சங்கரன்கோவில் நகராட்சி நிர்வாக அதிகாரிகள், தண்ணீர் தேங்கியுள்ள இடங்களைப் பார்வையிட்டு, வெள்ள நீர் வடிந்து செல்லும் வைகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன், அத்தியாவசிய தேவைகளைத் தவிர வேரெதற்கும் வெளியே வரவேண்டாம் என்றும், நீர் நிலைகளுக்குக் குளிக்கச் செல்ல வேண்டாம் என்றும், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், மழைநீர் தேங்கும் அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்கிக் கொள்ளாம் என்றும், மீட்புப் பணிகள் அல்லது மற்ற அவசர உதவிகளுக்கான தொடர்பு கொள்ள வேண்டிய எண்ணையும் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வெளுத்து வாங்கும் கனமழை: திருநெல்வேலி - தென்காசி இடையே போக்குவரத்து துண்டிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.