தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் பிரதான சுற்றுலா தலமான குற்றாலம் அமைந்துள்ளது. குற்றால அருவிகளில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் சீசன் காலகட்டங்களாகும். ஆனால் கரோனா தொற்று பரவல் காரணமாகவும் பல மாதங்களாக அருவிகளில் சுற்றுலா பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் அடிப்படையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டது. ஆனால் பருவமழை காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து ஆர்ப்பரித்து கொட்டியதால், அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை அளவு குறைந்தன் காரணமாக அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து குறைந்துள்ளது. இதையடுத்து பொதுமக்கள் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் ஓரிரு தினங்களில் தண்ணீர் முழுமையாக குறையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், விடுமுறை தினமான இன்று சுற்றுலா பயணிகள் குவியத் தொடங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: ஸ்ரீசுயம்பு ஆதிநாகத்தம்மன் கோயில் திருவிழா!