தென்காசி: குற்றாலம், செங்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று நள்ளிரவு பலத்த மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியிலும் தொடர்ந்து கனமழை பெய்தது. இதன் காரணமாக குற்றாலம் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அந்த இரு அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
குற்றாலம் மெயின் அருவி அபாய வளைவை தாண்டி தண்ணீர் விழுகிறது. தற்போது சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் குற்றாலத்திற்கு அதிக அளவில் வருகின்றனர்.
வெள்ளப்பெருக்கு காரணமாக மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் ஆவலுடன் நீராட வந்த மக்கள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். அதே சமயம் ஐந்தருவி, சிற்றருவிகளில் குளிக்க தடை இல்லை.
இதையும் படிங்க: ஆன்லைன் இசையமைப்பாளர் கொலை விவகாரம்; 5 பேர் கைது