ETV Bharat / state

ஆக.22ல் கோட்டையை நோக்கி பேரணி - தமிழ்நாடு பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு! - TN Panchayat Leaders Association announced

பஞ்சாயத்து ராஜ் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், பஞ்சாயத்து தலைவர்களுக்கு மதிப்பூதியம் 30ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டையை நோக்கி ஆக. 22ஆம் தேதி பேரணி செல்ல உள்ளதாக தமிழ்நாடு பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 27, 2023, 10:41 PM IST

தமிழ்நாடு பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு

தென்காசி: பஞ்சாயத்து தலைவர்களுக்கான உரிமையை மீட்க ஆக.22 ஆம் தேதி கோட்டையை நோக்கி பேரணியாக செல்லப் போவதாக பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். பஞ்சாயத்து ராஜ் திட்டத்தை அமல்படுத்துக, பஞ்சாயத்து தலைவர்களுக்கு மதிப்பூதியம் 30ஆயிரம் ரூபாய் வழங்குக உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தியும் பஞ்சாயத்து தலைவர்களுக்கான உரிமையை மீட்கக் கோரியும் கோட்டையை நோக்கி ஆக. 22ஆம் தேதி பேரணி செல்ல உள்ளதாக தமிழ்நாடு பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் குத்துக்கல்வலசை தனியார் திருமண மண்டபத்தில் இன்று (ஜூலை 27) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் டி.கே.பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழ்நாடு பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் முனியாண்டி மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஆரணி ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில் பஞ்சாயத்து ராஜ் திட்டத்தை முழுமையாக அமல்படுத்துதல், பஞ்சாயத்து தலைவர்களுக்கு மதிப்பூதியம் 30ஆயிரம் ரூபாய் மற்றும் ஓய்வூதியம் பத்தாயிரம் வழங்குதல், அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள் டெண்டர் உள்பட அந்தந்த கிராம ஊராட்சியே செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையும் படிங்க: தொழில்துறை கூட்டணி சுழற்சிப் பொருளாதாரத்திற்கு அடித்தளமாக அமையும்: மத்திய அமைச்சர்

குறிப்பாக, ஊராட்சி எல்லைக்குள் நடைபெறும் அரசு விழாக்கள் அந்தந்த கிராம ஊராட்சி தலைவர்கள் தலைமையில் நடைபெற வேண்டும், ஊராட்சியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும் அதை சம்பந்தப்பட்ட ஊராட்சி தலைவரின் பரிந்துரையின் பேரில் நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டு, மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் தென்காசி மாவட்ட அளவிலான பஞ்சாயத்து தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிம் பேசிய தமிழ்நாடு பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் முனியாண்டி, “தென்காசி மாவட்ட அளவிலான பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவருக்கான தலைவர்களுக்கான அதிகாரங்கள் முழுமையாக பறிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சந்திரயான்-3 விண்கல உபகரணங்களை வழங்கிய சேலம் உருக்காலைக்கு ISRO பாராட்டு!

ஆகவே, பஞ்சாயத்து தலைவர்களுக்கான அதிகாரங்களை மீட்டெடுக்க வேண்டும், பஞ்சாயத்து ராஜ் திட்டத்தை (Panchayat Raj Scheme) முழுமையாக அமல்படுத்த வேண்டும், அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள் டெண்டர் உட்பட அந்தந்த கிராம ஊராட்சியே செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி தமிழ்நாடு அளவில் உள்ள பஞ்சாயத்து தலைவர்களை ஒன்றிணைத்து, கோட்டையை நோக்கி பேரணி நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஆங்கில கால்வாயை இருமார்க்கத்திலும் நீந்தி கடந்து சாதனைப் புரிந்த தமிழக மாணவன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.