ETV Bharat / state

தென்காசி காசி விஸ்வநாதரின் திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்... - Temple festival

தென்காசி காசி விஸ்வநாதரின் திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 12, 2022, 7:11 PM IST

தென்காசி: தென்காசியில் மிகவும் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் ஆலயத்தின் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று காலை காசி விஸ்வநாதரின் திருக்கல்யாண திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொடிமரத்துக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்து தீபாரங்களை காண்பிக்கப்பட்டது.

11 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் நாள்தோறும் காலை, மாலை இரு வேலைகளிலும் சிறப்பு அலங்காரத்தில், சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. நாள்தோறும் காமதேனு, சிம்மம், ரிஷபம், கிளி போன்ற வாகனங்களில் சுவாமி அம்பாள் திருவீதியுலா நடைபெறுகிறது.

தென்காசி காசி விஸ்வநாதரின் திருக்கல்யாண திருவிழா

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி வருகிற (அக்.20) ஆம் தேதி நடைபெறுகிறது. பின், (அக்.22) ஆம் தேதி காலை ஆனைப்பாலம் தீர்த்தவாரி மண்டபத்தில் அம்பாள் எழுந்தருளும் நிகழ்ச்சியும், மாலை சுவாமி காசி விஸ்வநாதர் அம்பாளுக்கு தபசு காட்சி கொடுக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு நடைபெறும் சுவாமி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சியோடு விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை காசி விஸ்வநாதர் ஆலய நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: காலத்திற்கு ஏற்ப கல்வி என்பது மாற வேண்டும் - பொன்முடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.