ETV Bharat / state

புரெவி புயல் வலுவிழந்த காரணத்தினால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் - தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

தென்காசி : புரெவி புயலானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த காரணத்தினால் மழைப்பொழிவு மட்டுமே இருக்கக் கூடும் என தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

புரெவி புயல் வலுவிழந்த காரணத்தினால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

author img

By

Published : Dec 3, 2020, 10:55 PM IST

வங்க கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் காரணமாக தென் தமிழ்நாட்டில் பலத்த கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு அரசு பல்வேறு அரசு பல்வேறு முன்னொச்சரிக்கை நடவடிக்களை மேற்கொண்டுள்ளது.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் இன்று (டிச.3) நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் உதயகுமார், “ புரெவி புயலானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு இழந்த காரணத்தினால் மழைப்பொழிவு மட்டுமே இருக்கக்கூடும். குறைந்த அளவிலேயே காற்று வீசக்கூடும். எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. தென்காசி மாவட்டத்தில் ஒரு வாரமாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மக்களுக்கு உதவ தேவையான அனைத்து மருத்துவ வசதிகளுடன் மீட்பு படை, கடற்படை தயாராக இருக்கிறது. மக்களுக்குத் தேவையான அனைத்து உணவு பொருள்களும் அதிகளவில் சேமித்துவைக்கப்பட்டுள்ளது. மக்கள் அச்சப்பட தேவை இல்லை.

புரெவி புயல் வலுவிழந்த காரணத்தினால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

மேலும் பேசிய அவர், தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தடை உத்தரவில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் குற்றால அருவிகளுக்கான தடை உத்தரவை நீக்குவது குறித்து மாவட்ட ஆட்சியருடன் கலந்தோசிக்கப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் ” என தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, தென்காசி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனு ஜார்ஜ், மாவட்ட ஆட்சியர் சமீரன், வருவாய், பொதுப்பணித்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை, பொது சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைச் சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

இதையும் படிங்க : ரஜினிகாந்த் உடன் திமுக கூட்டணி வைக்குமா? - ஆ.ராசா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.