ETV Bharat / state

கரோனா பாதிப்பு: குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவு - வியாபாரிகள் வேதனை

தென்காசி: கரோனா தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

Corona vulnerability: The number of tourists coming to Courtallam is low!
தென்காசி மாவட்ட செய்திகள்
author img

By

Published : Sep 15, 2020, 10:17 PM IST

தென்காசி மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்களில் முக்கிய அம்சமாக குற்றாலம் காணப்படுகிறது. ஓங்கி உயர்ந்து நிற்கும் மேற்குத் தொடர்ச்சி மலை, சுற்றிலும் பச்சை பசுமையான மரங்கள், வேறெங்கும் காணப்படாத அரியவகை மூலிகைச் செடிகளைக் கொண்டு மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவி என்று அருகே அமைந்துள்ள ஒன்பது அருவிகள் அமைந்துள்ளன.

தென்காசியில் தற்போது குற்றாலத்தில் சீசன் தொடங்கியுள்ள நிலையில் கரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் வருகையின் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகளின் வருகைக்காக காத்திருக்கும் அப்பகுதி வியாபாரிகளுக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

குற்றாலத்தில் சீசன் தொடங்கிய மூன்று மாதங்கள் மட்டுமே வியாபாரம் செய்யும் அப்பகுதி மக்கள், தற்போது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். மேலும், இது குறித்து அவர்கள் கூறியதாவது, "கரோனா ஊரடங்கின் காரணமாக சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல தமிழ்நாடு அரசு தடைவிதித்திருந்தது.

ஆனால், தற்போது சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்திற்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், கரோனா அச்சத்தின் காரணமாக பலரும் இங்கு வருவதை தவிர்க்கின்றனர்.

மேலும், அரசின் அறிவிப்பு பலருக்கும் தெரியாமல் இருக்கிறது. இதனால், பொதுமக்களுக்கு தெரியும் வண்ணம் இதனை கொண்டுசெல்ல வேண்டும். சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தால்தான், எங்களுடைய வாழ்வாதாரம் அதிகரிக்கும்.

இது குறித்து, அரசு பொதுமக்களுக்கு தெரியும் வண்ணம் இதனைப் பல இடங்களில் அறிவிக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.