ETV Bharat / state

குன்னூர் விபத்தில் உயிரிழந்தோரின் உடல்கள் தகனம்.. உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி! - Coonoor Accident

Coonoor Accident: குன்னூர் அருகே விபத்தில் பலியான 9 பேரின் உடல்கள் சொந்த ஊரான தென்காசி மாவட்டம் கடையத்திற்கு எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

coonoor accident
குன்னூர் விபத்தில் உயிரிழந்தோரின் உடல்கள் சொந்த ஊரான கடையத்திற்கு கொண்டு வரப்பட்டு தகனம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 2, 2023, 2:36 PM IST

குன்னூர் விபத்தில் உயிரிழந்தோரின் உடல்கள் சொந்த ஊரான கடையத்திற்கு கொண்டு வரப்பட்டு தகனம்

தென்காசி: தென்காசியில் இருந்து 57 பயணிகள் சுற்றுலாப் பேருந்தில் ஊட்டிக்கு சுற்றுலா சென்று உள்ளனர். இதனையடுத்து, ஊட்டியில் இருந்து கடந்த செப்.30 மாலை தென்காசி நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்த நிலையில் மாலை 5.15 மணியளவில் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் 9வது கொண்டை ஊசி வளைவின் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலாப் பேருந்து சாலையோர தடுப்பை உடைத்து கொண்டு 50 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளது.

இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர். விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே கடையத்தைச் சேர்ந்த இளங்கோ அவரது மகள் கெளசல்யா, ஜெயா, பேபிகலா, முருகேசன், பத்மராணி, தங்கம், நிதிஷ், கண்ணா உள்பட 9 பேர் உயிர் இழந்தனர். மேலும், 40க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்த ஒன்பது பேரின் உடல்கள் நேற்று காலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு தனித்தனி ஆம்புலன்ஸ் மூலம் குன்னூரில் இருந்து கடையத்திற்கு இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் உடல்கள் கொண்டு வரப்பட்டன. இதைத்தொடர்ந்து உறவினர்கள் இறந்தவர்களின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

மேலும், அவர்களின் உடல்கள் கடையத்தைச் சுற்றியுள்ள இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. இருவர் உடல்கள் கடையம் அருகேயுள்ள ஆழ்வார்குறிச்சி பகுதிக்கு தகனத்திற்காக கொண்டு செல்லப்பட்டது. பாபநாசம் அகஸ்தியர்புரம் பகுதியில் ஒருவரது உடலும் தகனத்திற்காக கொண்டு செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, இந்த விபத்து குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள "X" பதிவில் குன்னூர் அருகே சுற்றுலா பஸ் விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. எனது எண்ணங்கள் விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு உடன் உள்ளன. மேலும் காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய வேண்டுமென இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் என்றார். விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூபாய் 2 லட்சம் வழங்கப்படும் எனவும், காயமடைந்தவர்களுக்கு 50,000 வழங்கப்படும் என தெரிவித்தார்.

இந்த துயர சம்பவத்தினால் மத்திய மற்றும் மாநில அரசுகள் நிவாரணங்களை அறிவித்து உள்ளனர். மேலும் தமிழக முதலமைச்சரும் இரங்கல் தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. பல்வேறு விதமான கட்சி நிர்வாகிகள் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க:மாற்றுத்திறனாளி வாகனத்தை காரணம் காட்டி மகளிர் உரிமைத் தொகை மறுப்பா? - ஈரோடு பெண் கண்ணீர் மல்க கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.