ETV Bharat / state

தென்காசியில் மூன்று பேரை கொடூரமாக கடித்துக்குதறிய கரடி!

தென்காசியில் உள்ள சிவசைலம் வனப்பகுதியில் மூன்று பேரை கரடி ஒன்று கடித்துக் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author img

By

Published : Nov 6, 2022, 3:25 PM IST

Updated : Nov 8, 2022, 6:57 PM IST

bear attacked
bear attacked

தென்காசி: கடையம் அருகே உள்ள சிவசைலம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்கள் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. அங்குள்ள பெத்தான்பிள்ளை குடியிருப்புப்பகுதிகளில் இரவு நேரங்களில் கரடி உள்ளிட்ட காட்டு விலங்குகள் நடமாட்டம் இருந்து வருகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை அப்பகுதியில் காய்கறி விற்பதற்காக வியாபாரி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

அப்போது வனப்பகுதியில் இருந்து வந்த கரடி ஒன்று வியாபாரியை கடித்துக் குதறியுள்ளது. வியாபாரி கதறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் வசித்து வரும் சைலப்பன், நாகேந்திரன் உள்ளிட்ட சிலர் அங்கு சென்றுள்ளனர். அவர்கள் கையில் கரடியை விரட்டுவதற்கான எந்தவித ஆயுதங்களும் இல்லாத நிலையில் சைலப்பன் மற்றும் நாகேந்திரனையும் கரடி கடித்து குதறி விட்டு வனப்பகுதிக்குள் ஓடி விட்டது.

இந்நிலையில், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வனத்துறை அலுவலர்கள் மற்றும் ஆழ்வார்குறிச்சி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இப்பகுதியில் வனவிலங்குகள் புகுந்து அட்டகாசம் செய்வது வாடிக்கையாக உள்ள நிலையில் கரடிகளை ஊருக்குள் வராமல் இருக்க வனத்துறையினர் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் ஏற்கெனவே பலமுறை கோரிக்கை வைத்தனர்.

தென்காசியில் மூன்று பேரை கொடூரமாக கடித்துக்குதறிய கரடி!

இந்நிலையில், கரடி நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தக்கோரி அப்பகுதி மக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

இதையும் படிங்க: தென்காசியில் கோவிலில் புகுந்த மழை நீரை அகற்றும் பணி தீவிரம்!

Last Updated : Nov 8, 2022, 6:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.