தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு படிப்படியாக நீட்டிக்கப்பட்டது. தற்போது ஊரடங்கு உத்தரவு தளர்வு, அறிவிக்கப்பட்டு கடைகளை கட்டுப்பாடுகளுடன் செயல்பட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
அதன்படி தென்காசி மாவட்ட நகராட்சி பகுதிகளில் தேநீர் கடைகள், பாத்திரக் கடைகள், மளிகைக் கடைகள் என சிறு வியாபாரிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வாடிக்கையாளர்களின் நலன் கருதியும், அரசுக்கு ஒத்துழைக்கும் விதமாகவும் வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் நகராட்சிப் பகுதிகளில் உள்ள கடைகள் இயங்கும் நேரத்தை குறைத்து காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்க தாமாக முன்வந்து அறிவித்துள்ளனர்.
மேலும் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும்; சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: முழு ஊரடங்கு: 4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் இயங்காது!