ETV Bharat / state

பெண் காவலரிடம் ஆபாசமாகப் பேசிய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

தென்காசி: பெண் காவலரிடம் ஆபாசமாகப் பேசிய இருப்புப் பாதை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரவணனை பணி இடைநீக்கம் செய்து ரயில்வே காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமார் உத்தரவிட்டுள்ளார்.

ே்ே
ே்ே்
author img

By

Published : May 15, 2020, 12:17 PM IST

தென்காசி மாவட்டம், இருப்புப் பாதை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணி செய்பவர், சரவணன். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, திருச்சி ரயில்வே காவல் நிலையத்தில் பணிபுரிந்தார்.

sdsd
உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

அப்போது, அவருக்குக் கீழ் பணிபுரியும் திருமணம் ஆகாத பெண் காவலர் ஒருவரிடம் அலைபேசியில் ஆபாசமாகப் பேசியுள்ளார். வார்த்தைகள் மூலம் பெண் காவலரை, தனது ஆசைக்கு இரையாக்க முயற்சி செய்துள்ளார். இருப்பினும், பெண் காவலர் கடைசி வரை மறுத்துவிட்டு, திரும்ப அழைப்பதாகக் கூறி, அலைபேசியின் இணைப்பைத் துண்டித்துள்ளார். இதுதொடர்பாக பெண் காவலர் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

பெண் காவலரிடம் ஆபாசமாகப் பேசிய உதவி ஆய்வாளரின் ஆடியோ

இந்நிலையில், இருவரும் பேசிய ஆடியோ நீண்ட மாதங்களுக்குப் பிறகு, சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. தகவலறிந்து ரயில்வே காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமார், இருப்புப்பாதை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் உதவி ஆய்வாளர் சரவணனை பணியிடை நீக்கம் செய்து, உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.

இதையும் படிங்க: திண்டுக்கலில் ஹாயா டீ குடித்துவிட்டு திரும்பிய கரோனா நோயாளி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.