தென்காசி: கடையநல்லூரை அடுத்துள்ள வாசுதேவநல்லூர் மகளிர் தனியார் கலைக் கல்லூரியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு இன்று (ஜூலை 3) உலக சாதனைக்கான யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தனியார் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டதைத் தொடர்ந்து யோகா தினத்தை நினைவு கூறும் வகையில் பல்வேறு நட நிகழ்ச்சியுடன் கூடிய கலை நிகழ்ச்சிகளும் கல்லூரியில் அரங்கேறியது.
மேலும் உலக யோகா தினத்தை முன்னிட்டு சிவகிரி பகுதியைச் சேர்ந்த பிரணவயோகா மையம் சார்பாக நடைபெற்ற உலக சாதனைக்கான யோகா நிகழ்ச்சியில் பல்வேறு மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த யோக நிகழ்ச்சியில் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிக்காட்டும் வகையில் பல்வேறு விதமான யோகா கலைகளை செய்து காட்டினார். ஒரு சில மாணவர்கள் நடனத்துடன் கூடிய யோகாவை செய்து காட்டி அசத்தினர்.
உலக யோகா தினத்தை முன்னிட்டு பல்வேறு மாணவர்கள், பல்வேறு விதமான யோகாவை செய்து காட்டியதில், சிவகிரி பகுதியைச் சேர்ந்த தேவதர்சன் அருண், நவநீதகிருஷ்ணன், சந்தோஷ்குமார் மற்றும் வெங்கட் பிரபு ஆகிய நான்கு மாணவர்கள் செய்த யோகா உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது.
இதையும் படிங்க: படிக்கும் பள்ளியில் கழிவறை கூட இல்லை: திருவண்ணாமலை அருகே பள்ளி மாணவர்கள் போராட்டம்!
அதில் தேவதர்சன் அருண் (14) என்ற மாணவன் ஓம்காரா ஆசனம் என்ற ஆசனத்தை ஆறு நிமிடத்திற்கு மேல் செய்து கின்னஸ் சாதனை புரிந்தார். நவநீதகிருஷ்ணன் (14) என்ற மாணவன் உத்தீத திவிபாத கந்தர் என்னும் ஆசனத்தை ஐந்து நிமிடங்கள் செய்து கின்னஸ் சாதனை புரிந்தார். சேது சந்தோஷ்குமார் (12) கந்தபீட ஆசனத்தை 30 நிமிடங்கள் செய்தும், வெங்கட் பிரபு (10) பத்ம மயூராசனம் என்னும் ஆசனத்தை 4 நிமிடத்திற்கு மேல் செய்தும் கின்னஸ் சாதனை புரிந்தனர்.
இதனால் இந்த நான்கு மாணவர்களும் நோவா உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியை வியாசா மகளிர் கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு ஆசனத்தை கண்டு ரசித்தனர். இதனைத் தொடர்ந்து தானாக முன்வந்து ஒரு பள்ளி மாணவி பல்வேறு ஆசனங்களை கல்லூரி மாணவர்கள் மத்தியில் செய்து காண்பித்தார்.
மேலும் நோவா உலக சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த இந்த நான்கு மாணவர்களுக்கும், பத்மஸ்ரீ ஸ்ரீதர்வேம்பு வெளிநாடு மற்றும் அண்டை மாநில பாரதிய ஜனதா கட்சி மாநில துணைத் தலைவர் மற்றும் வியாசக் கல்லூரி நிர்வாகத்தினர் சான்றிதழ்களையும் தங்களது பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 50 லட்சம் மதிப்புள்ள வைர மோதிரத்தைக் கழிவறையில் போட்ட பெண்… காரணம் என்ன?