தென்காசி: தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி பள்ளி மாணவ மாணவியர்களின் கலைத்திறமைகளை வெளிக்கொண்டு வர தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாநிலம் முழுவதும் 'கலைத் திருவிழா' நடைபெற்று வருகிறது. அதன்
ஒருபகுதியாக, சங்கரன்கோவிலில் வட்டார அளவிலான போட்டிகள் நடைபெற்றன.
இதன்படி, சங்கரன்கோவில் வட்டம், வடநத்தம்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வரும் மாணவி மு.சுவாதி மெல்லிசை தனிப்பாட்டு போட்டியில் வெற்றி பெற்றார். தொடர்ந்து சங்கரன்கோவில் வட்டார அளவிலான போட்டியிலும் தேர்வாகிய நிலையில், மாவட்ட அளவில் நடந்த மெல்லிசை தனிப்பாட்டு போட்டியிலும் மாணவி மு.சுவாதி முதலிடத்தில் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வாகி உள்ளார்.
இந்த மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வாகிய மாணவி மு.சுவாதிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பால்ராஜ் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள், ஊர்ப் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் தங்களின் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மண் மணம் வீசும் மண்பானைகளுக்கு வெளிநாட்டில் அதிகரிக்கும் மவுசு; மகிழ்ச்சியில் உற்பத்தியாளர்கள்