தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் மையப் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் தனியார் நடுநிலைப்பள்ளியில் 455 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்தப் பள்ளியில் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த ஜான் கென்னடி, 2011ஆம் ஆண்டு ஆசிரியராகப் பணியில் சேர்ந்துள்ளார். பின்னர் 2015ஆம் ஆண்டில் பள்ளிக்கு தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்று, பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த பத்து நாட்களாக அவர் மீது தொடர் பாலியல் புகார் எழுந்த நிலையில், இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் சம்பத் குமார் சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன் அடிப்படையில் அவரை விசாரணை செய்ததில், தலைமை ஆசிரியராக இருந்து கொண்டு பள்ளி மாணவிகளிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிய வந்துள்ளது. அதைத் தொடர்ந்து அவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சங்கரன்கோவில் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, பள்ளி மாணவிகளுக்கு போதை வஸ்துக்களை கொடுத்து பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாக ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் பெற்றோர்களை கலக்கமடையச் செய்துள்ளது.
இதையும் படிங்க: மகளுக்குப் பாலியல் தொல்லை: தந்தை போக்சோவில் கைது