தென்காசி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்ட நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தற்காலிகமாக பத்திரப்பதிவு அலுவலகத்தில் இயங்கி வருகிறது.
தற்போது புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தற்காலிக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் முழக்கங்கள் எழுப்பி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்ட தென்காசியில் வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், இளநிலை வருவாய் ஆய்வாளர் ஆகிய பதவிகளுக்கு பதவி உயர்வு வழங்கிடவும், புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மாவட்டத்தின் மையப்பகுதியில் அமைக்கவும் வலியுறுத்தப்பட்டது.
மேலும் வருவாய்த்துறையில் சுழற்சி முறையில் பணியாளர்களை நியமனம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளையும் அலுவலர்கள் வலியுறுத்தினார்கள்.
இதையும் படிங்க: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்!