ETV Bharat / state

நலிவடையும் மண்பாண்ட தொழில்; தென்காசியில் 15000 மண்அடுப்புகள் தேக்கம் - அரசு கொள்முதல் செய்ய கோரிக்கை - இலவசமாக செம்மண்

Declining pottery works: பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் பகுதியில் நலிவடைந்து வரும் மண்பாண்டத் தொழில் மற்றும் அத்தொழிலாளர்களின் நிலை குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

பொங்கல் பரிசு தொகுப்பில் மண் பானைகள் தர வேண்டும் என கோரிக்கை
நலிவடைந்து வரும் மண்பாண்டத் தொழில்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 10, 2024, 8:20 PM IST

தென்காசியில் நலிவடையும் மண்பாண்டத் தொழில்; பொங்கல் பரிசு தொகுப்பில் மண் அடுப்பு சேர்க்க கோரிக்கை..

தென்காசி: தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் பண்டிகை பொங்கல். விவசாயத்தைப் போற்றும் வகையில், தமிழர் பண்பாட்டோடு கலந்துள்ள இந்த பொங்கல் பண்டிகையை ஒவ்வொரு ஆண்டும் அதன் சிறப்புத் தன்மை மாறாமல் தமிழர்கள் கொண்டாடி வருகிறது.

அந்த வகையில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் பாரம்பரிய ஆடைகள் அணிந்து, வீட்டு வாசலில் கரும்புகளுடன் மண் அடுப்புகள் அமைத்து, மண் பானைகளில் பொங்கல் செய்து உறவினர்களுடன் பகிர்ந்து உண்டு பொங்கலைக் கொண்டாடுவர்.

ஆனால், சமீப காலமாக கேஸ் அடுப்புகளின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், மண்பானைகளைப் பயன்படுத்தி மண் அடுப்புகளில் பொங்கல் வைக்கும் பழக்கம் மக்களிடையே குறைந்து வருகிறது. இதனால், மண்பாண்டங்கள் செய்வதைத் தொழிலாகக் கொண்டு அவற்றையே வாழ்வாதாரமாகவும் கொண்டுள்ள மண்பாண்டத் தொழிலாளர்களின் நிலை கவலைக்குள்ளாகியுள்ளது.

அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் பிரதான தொழிலாக விளங்கும் விவசாயத்திற்கு அடுத்தபடியாக மண் பானைகள் மற்றும் மண் அடுப்புகள் செய்யும் பணி பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. மண்பாண்டங்கள் செய்வதற்குப் பெயர் போன ஊரான சுந்தரபாண்டியபுரம் பகுதியில் சுமார் 15,000 மேற்பட்ட மண் அடுப்புகளைச் செய்து முடித்துள்ள மண்பாண்ட தொழிலாளர்கள் அவை விற்பனையாகுமா அல்லது யாருக்கும் பயனற்று வீணாகுமா என்ற பரிதவிப்புடன் காத்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் முழுவதும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மண்பானை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாகத் தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் பகுதியில் 3 தலைமுறையாக மண்பானை மற்றும் மண் அடுப்புகள் செய்யும் தொழில் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

தற்போது, மக்கள் கேஸ் அடுப்புகள் மற்றும் ஸ்டீல் பாத்திரங்களுக்கு மாறிவிட்ட நிலையில் மண் பானைகள் செய்யும் தொழில் நலிவடைந்து விட்டதாக அத்தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இத்தொழில் மூலமாக அதிகப்படியான வருவாய் தங்களுக்கு இல்லாத போதிலும் தங்களின் குலத் தொழில் என்பதால் இதனைக் கைவிடாமல் செய்து வருவதாக இத்தொழிலில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த தொழிலுக்கு அரசாங்கம் ஒரு சில நிபந்தனைகளுடன் இலவசமாகச் செம்மண் கொடுத்தாலும், தங்களுக்கு அது சரிவரக் கிடைக்கப் பெறவில்லை எனவும், தங்களுக்குக் கொடுக்கக்கூடிய இலவச மண்ணை சேமித்து வைத்தே தங்களுடைய தொழிலையும் வாழ்வாதாரத்தையும் காப்பாற்றிக் கொள்வதாக அத்தொழிலாளர்கள் வேதனையுடன் கூறியுள்ளனர்.

மேலும், தற்போது மழைக் காலம் என்பதால் இங்கு 100% செய்ய வேண்டிய வேலைகள் தற்போது வெறும் 25 சதவீதமாகக் குறைந்துள்ள நிலையிலும், பொங்கல் பண்டிகை என்பதால் சுமார் 15,000 மேற்பட்ட மண் அடுப்புகளைச் செய்து விற்பனைக்காக வைத்துள்ளதாக மண்பாண்டத் தொழிலாளர்கள் கூறியுள்ளனர்.

ஒரு அடுப்பு விற்றால் தங்களுக்கு ரூபாய் 10 மட்டுமே லாபம் உள்ளதாகக் கூறும் தொழிலாளர்கள், இந்த தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டு ஏராளமான குடும்பங்கள் உள்ளதால் அரசாங்கம் பொங்கல் நிவாரண தொகுப்பில் ஒவ்வொருவருக்கும் மண் அடுப்பு மற்றும் மண் பானைகள் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

இதனால், தங்களின் வாழ்வாதாரம் இன்னும் மேம்படும் என மண்பானை மற்றும் மண் அடுப்பு செய்யும் தொழிலாளர்கள் தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொழில்கள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மழையும் பெய்து வருவதால், செய்து வைத்த மண் அடுப்புகளும் மண்பானைகளும் விற்பனை செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்போடு தொழிலாளர்கள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

முழுமையான உடல் உழைப்பைச் சார்ந்த இந்த தொழிலையும் இதன் தொழிலாளர்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே இத்தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில் மருத்துவ முகாம்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.