ETV Bharat / state

ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம் - தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

தென்காசி: சர்க்கரை ஆலை நிறுவனத்திடமிருந்து கரும்புக்கான நிலுவைத் தொகையை பெற்றுத் தரக்கோரி விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
author img

By

Published : Oct 13, 2020, 2:06 AM IST

தென்காசி மாவட்ட சுற்றுவட்டார கரும்பு விவசாயிகளிடம் இருந்து சர்க்கரை ஆலை நிறுவனம் கரும்பை பெற்றுக்கொண்டு கோடிக்கணக்கான நிலுவைத் தொகையை இரண்டு ஆண்டுகளாக வழங்காமல் ஏமாற்றி வருகிறது.

இதனைக் கண்டித்து கரும்பு விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கரும்புடன் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் விவசாயிகளுடன் நடத்திய மூன்று கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது.
விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
இதன் காரணமாக, அய்யாக்கண்ணு தலைமையில், விவசாயிகள் கரும்புக்கான நிலுவைத் தொகை வரும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உணவு சமைத்து தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.