ETV Bharat / state

ரூ.22 லட்சம் ஆன்லைன் மோசடி.. ஹரியானா சென்று கைது செய்த தென்காசி சைபர் கிரைம் போலீசார்! - காவல் கண்காணிப்பாளர் பாராட்டு

Tenkasi District Crime news: மோசடியில் ஈடுபட்ட நபரை ஹரியானா மாநிலத்திற்கு நேரடியாகச் சென்று கைது செய்து தென்காசி மாவட்டத்துக்கு அழைத்து வந்த மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மோசடி நபரை ஹரியானா மாநிலத்திற்கு நேரடியாக சென்று கைது

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 10, 2023, 1:14 PM IST

தென்காசி: தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஒருவர் பெட்ரோல் பங்க் அமைப்பது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் கொடுக்கப்பட்ட விளம்பரத்தின் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார். இது தொடர்பாக அந்த நபர் நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசியபோது ரூ.50 லட்சம் வரை வேண்டும் என கூறப்பட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக ரூ.22 லட்சம் வரை கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பணம் அனுப்பிய பின்னர் பெட்ரோல் பங்க் அமைப்பது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் சந்தேகம் அடைந்த நபர், விண்ணப்பித்த முகவரியான குஜராத்திற்கே நேரடியாக சென்று பார்த்துள்ளார். ஆனால், அங்கு சென்று பார்த்தபோது அந்த முகவரியில் அவ்வாறான எந்த நிறுவனமும் செயல்படாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதையும் படிங்க: சிலிண்டர் கசிவினால் ஏற்பட்ட விபத்து..! பஞ்சாபில் ஒரே கும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி..!

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபர் தென்காசி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் கடந்த வருடம் அக்டோபர் மாதம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், தொடர் விசாரணையில் ஈடுபட்டு வந்த சைபர் கிரைம் போலீசார் அவரது வங்கி கணக்கு, அதில் கொடுக்கப்பட்டிருந்த மெயில் ஐடி, தொலைபேசி எண் ஆகியவற்றின் அடிப்படையில் மோசடி செய்த நபர் இருக்கும் இடத்தைக் கண்டறிந்துள்ளனர்.

இந்நிலையில், ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டவர் பீகாரைச் சேர்ந்த அமீர் என்பதும், இவர் தற்போது ஹரியானா மாநிலத்தில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளர் ஜோஸ்லின் தலைமையிலான போலீசார் ஹரியானா மாநிலத்திற்கு நேரடியாகச் சென்று, அமீர் இருக்கும் இடத்தை நோட்டமிட்டு அவரை கைது செய்து தென்காசிக்கு அழைத்து வந்துள்ளனர்.

ஆன்லைன் மூலம் ரூ.22 லட்சம் வரை மோசடி செய்து ஏமாற்றிய நபரை தென்காசி போலீசார் ஹரியானா பகுதிக்கே நேரடியாகச் சென்று கைது செய்து வந்த நிலையில், அவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டியுள்ளார்.

இதையும் படிங்க: குழந்தை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் காவல் நிலையத்தில் மரணம்.. கோவையில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.