இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "தென்காசி மாவட்டத்தில் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் பல்வேறு நிவாரண பொருள்கள் வழங்க முன்வந்துள்ளனர்.
அவர்கள் நிவாரண பொருள்களை தங்கள் பகுதியில் உள்ள வட்டாட்சியரிடமோ அல்லது உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களிடமோ அதாவது நகராட்சியாக இருந்தால் அந்தந்த நகராட்சி ஆணையர்களிடமோ பேரூராட்சியாக இருந்தால் செயல் அலுவலரிடமோ ஊராட்சி ஒன்றியமாக இருந்தால் வட்டார வளர்ச்சி அலுவலரிடமோ ஒப்படைக்கலாம்.
இப்பணிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தில் http://stopcoronatn.xenovex.com/login என்ற இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தன்னார்வலர்கள் பயன்படுத்தப்படுவார்கள்.
மேலும் இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண்- 04633- 290548 மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள வேளாண்மை உதவி இயக்குநர் எண்ணான 9994574571க்கு தொடர்பு கொள்ளலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க... காவல் துறை உதவி எண்கள் அறிவிப்பு: போன் செய்தால் அத்தியாவசிய பொருள்கள் வீடு தேடி வரும்!