ETV Bharat / state

நீரில் மூழ்கி காணாமல் போன சிறுவன் - இரண்டாவது நாளாக தேடும் பணி! - குண்டாறு நீர்த்தேக்கம்

தென்காசி: செங்கோட்டை அருகேயுள்ள குண்டாறு அணையில் குளிக்கச் சென்ற 15 வயது சிறுவன் நீரில் மூழ்கி காணாமல் போன நிலையில் இரண்டாவது நாளாக அவனை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

2வது நாளாக தேடும் பணி
2வது நாளாக தேடும் பணி
author img

By

Published : Nov 2, 2020, 2:03 PM IST

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியையொட்டி குண்டாறு நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. இந்த நீர்த்தேக்கமானது 36 அடி கொள்ளளவு கொண்டது. தென்மேற்கு பருவமழை காரணமாக குண்டாறு நீர்த்தேக்கம் அதன் முழு கொள்ளளவை எட்டிவிட்டது. இந்நிலையில் அப்பகுதி சுற்றுவட்டார மக்கள் விடுமுறை நாட்களில் கரோனா தொற்று தடை உத்தரவை மீறி குண்டாறு நீர் வழித்தடங்களில் சென்று குளித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று(நவ .1) மாலை செங்கோட்டை சேர்ந்த கீழபள்ளிவாசல் பகுதியை சேர்ந்த நாவஸ் என்பவரின் மகன் ஜிப்ரின் (15) என்பவர் தனது நண்பர்களுடன் குண்டாறு நீர்த்தேக்கம் பகுதியில் குளிக்க சென்றுள்ளார். நீர்த்தேக்கத்தில் நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்த சிறுவன் ஜிப்ரின் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

2வது நாளாக தேடும் பணி

இதனைத் தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள் இதுகுறித்து தகவல் தெரிவிக்காமலேயே வீட்டிற்கு திரும்பியுள்ளனர். இரவு நேரமாகியும் சிறுவன் வீடு திரும்பாததன் காரணமாக அவரது பெற்றோர்கள் சக நண்பர்களிடம் விசாரித்ததில் நடந்தவற்றை கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஜிப்ரின் பெற்றோர் செங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் காவல் துறையினர் செங்கோட்டை, தென்காசி தீயணைப்பு துறையினர் உதவியுடன் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 2-வது நாளாகியும் சிறுவனின் உடல் கிடைக்காத நிலையில் தீயணைப்பு துறையினர் தேடும் பணியினை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: பத்திரப்பதிவுத் துறை துணைத்தலைவர் வீட்டில் சோதனை: கணக்கில் வராத ரூ.3.20 லட்சம் பணம் பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.