ETV Bharat / state

போதிய விளைச்சல் இல்லா சூரியகாந்தி பூக்கள் - வாடும் விவசாயிகள்

தென்காசி: சூரியகாந்தி பூக்களுக்கு நல்ல விலை இருந்தும், இந்த வருடம் போதிய விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் சூரியகாந்தி பூக்கள்

author img

By

Published : Jul 28, 2020, 12:09 PM IST

தென்காசி மாவட்டம் ஆயக்குடி பகுதியில் இருந்து சுரண்டை செல்லும் சாலையில் உள்ள விளை நிலங்களில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையில் இருபுறமும் மிளகாய், கத்தரிக்காய், சோளம் போன்ற பயிர்களுக்கு பிறகு இப்பகுதியில் உள்ள விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் சூரியகாந்தி பூக்கள் விவசாயம் செய்வது வழக்கம்.

கடந்த ஆண்டு நன்றாக விளைந்து தலையையாட்டி நின்ற சூரியகாந்தி பூ சாலையில் செல்வோரை நிற்க வைத்து புகைப்படம் எடுத்துச் செல்லும் அளவுக்கு நல்ல விளைச்சலை கொண்டிருந்தது.

ஆனால், இந்த வருடம் இப்பகுதிகளில் சூரியகாந்தி பூக்களின் விளைச்சல் மிகவும் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்பார்த்ததை விட அதிக மழை, வெயிலின் தாக்கத்தால் தற்போது 100 கிலோ எடை கொண்ட பூக்கள் சுமார் 4000 வரை விற்பனையாகிறது.

செடிகள் கூனிக்குறுகி நோய் தாக்கத்திற்கு உள்ளாகி உள்ளது. ஒரு சில செடிகள் மட்டும் பூத்துக் குலுங்குகின்றன. தற்போது ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றத்தால் சூரியகாந்தி பூ விளைச்சல் மிகவும் மோசமாகவும், நோய் தாக்கமும் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு சூரியகாந்தி பூ விளைச்சலில் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.