ETV Bharat / state

அச்சன்கோவில் ஸ்ரீதர்மசாஸ்தா பூஜை - ஊர்வலத்துக்கு தயாராகும் திரு ஆபரணபெட்டி

தென்காசி அச்சன்கோவில் ஸ்ரீதர்மசாஸ்தா திருக்கோயிலில் வரும் டிசம்பர் 18, 19, 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் உற்ஷவபலி பூஜை நடைபெறுகிறது.

4 நாட்கள் நடைபெறும் அச்சன்கோவில் ஸ்ரீதர்மசாஸ்தா உற்ஷவபலி பூஜை!

author img

By

Published : Dec 16, 2022, 3:52 PM IST

தென்காசி அச்சன்கோவில் ஸ்ரீதர்மசாஸ்தா திருக்கோயிலில் உற்ஷவபலி பூஜை

தென்காசி: அச்சன்கோவில் ஸ்ரீதர்மசாஸ்தா திருக்கோயில் மண்டல மஹோற்ஷவ விழாவை முன்னிட்டு பத்து நாட்கள் ஆராட்டு திருவிழா நடைபெறுகிறது. இதில் டிசம்பர் 16 இன்று திருஆபரணபெட்டி ஊர்வலம் நடைபெற உள்ளது. தொடர்ந்து டிச.17இல் திருக்கொடியேற்றத்துடன் முதல் நாள் திருவிழா நடைபெறும்.

இதனையடுத்து 2, 3, 4 மற்றும் 5ஆம் நாள் திருவிழாக்களில் உற்ஷவபலி பூஜை நடைபெறும். மேலும் 7 மற்றும் 8ஆம் நாள் திருவிழாக்களில் கருப்பன் துள்ளல் நடைபெற உள்ளது. தொடர்ந்து 9ஆம் நாள் திருவிழா அன்று தேரோட்டமும், 10ஆம் நாள் திருவிழா அன்று சாமிக்கு ஆராட்டு திருவிழாவும் நடைபெறும்.

இதனைத்தொடர்ந்து டிச.27அன்று மண்டல பூஜை நடைபெற உள்ளது. இவ்வாறு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷேசத்துடன் 12 நாட்களும் சிறப்புப் பூஜைகள் நடைபெறுகிறது. மேலும் ஒவ்வொரு நாளும் மாலை பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில் வரும் டிசம்பர் 18, 19, 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் உற்ஷவபலி பூஜை தந்திரி தலைமையில் நடைபெறும்.

அன்று காலை 10 மணி முதல் 11 மணிக்குள் விளக்கு வைத்தல் எனும் சாமி புறப்பாடு நடைபெறும். இந்த நேரத்தில் பக்தர்கள் வெளிபிரகாரத்தில் நிறுத்தப்பட்டு, நடை அடைக்கப்படும். மேல்சாந்தி ஸ்ரீகோயிலில் இருந்து உற்ஷவ மூர்த்தி விக்ரகத்தை விளக்குடன் வெளியே எடுத்து வந்து, உள்பிரகாரத்தில் அதற்கென அமைக்கப்பட்ட சப்பரத்தில் சாமியை எழுந்தருளச் செய்வார்கள்.

அப்போது உள்பிரகாரத்தில் கோயில் பணியாளர்கள், உற்ஷவபலி பூஜை கட்டளைதாரர்கள் மற்றும் முக்கியமானவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பின்னர் மரபாணி கொட்டி, எல்லா உப தெய்வங்களையும் அழைத்து சாமி முன்னிலையில் அனைத்து தெய்வங்களுக்கும் பலி எனும் நைவேத்தியம் படைக்கப்படும்.

அப்போது மடபள்ளியில் பாகம் செய்யபட்ட அரிசி சாதத்தினால் படைத்துக் கொண்டே இருப்பார்கள். பின் தாந்தரிகம் மூலம் கேட்டு கேட்டு போதும் என்று வரும் வரை, மீண்டும் மீண்டும் வைத்துக்கொண்டே இருப்பார்கள். இது சுமார் இரண்டு மணி நேரம் வரை தொடரும்.

பின்னர் அனைத்து தெய்வங்களுக்கும் படைத்து முடிந்ததும், வெளிபிரகாரத்தில் இருக்கும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அப்போது சாமிக்கு தீபாராதனை நடைபெறும். மேலும் இதேபோல் வெளிபிரகாரத்தில் உள்ள உப தெய்வங்களுக்கும் படைக்கப்படும்.

தொடர்ந்து 3 மணி வரை 16 சுற்றுக்கள் வெளிபிரகாரத்தில் சுற்றி வந்து படைக்கப்பட்டு, கடைசியாக மூன்று சுற்று ஓதி தூவி படைத்து, உற்ஷவபலி பூஜை நிறைவு செய்யப்படும். இதனையடுத்து ஸ்ரீகோயில் நடை திறந்து சாமியை உள்ளே வைத்து நிறைவு செய்வார்கள். இந்த பூஜை சபரிமலையிலும் அச்சன்கோவிலிலும்தான் நடைபெறுகிறது.

இதையும் படிங்க: மதுரை மீனாட்சி கோயிலில் அஷ்டமி சப்பர வீதி உலா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.