ETV Bharat / state

தென் மாவட்ட ரயில் நிலையங்களில் நடைமேடைகள் நீட்டிக்க உத்தரவு.. நிறைவேறிய மக்களின் நீண்ட நாள் கோரிக்கை!

நெல்லை - தென்காசி மற்றும் நெல்லை - திருச்செந்தூர் இடையே உள்ள முக்கிய ரயில் நிலையங்களின் நடைமேடைகளை நீட்டிக்க முன்மொழிவு செய்யப்பட்டதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் தெற்கு ரயில்வேக்கு நன்றி தெரிவித்துள்ளனர். மேலும் அதற்கான அறிவிப்பு வரும் பிப்ரவரி மாத பட்ஜெட்டில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

தென் மாவட்ட ரயில் நிலையங்களில் நடைமேடைகள் நீட்டிக்க உத்தரவு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 8, 2023, 7:58 PM IST

தூத்துக்குடி: நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இருந்து கேரளா செல்லும் மிக முக்கிய வழித்தடமான திருச்செந்தூர் - நெல்லை - தென்காசி - கொல்லம் ரயில் வழித்தடத்தில் நெல்லை, தென்காசி, செங்கோட்டை தவிர்த்து மற்ற ரயில் நிலையங்களில் 24 பெட்டிகள் நிறுத்தும் அளவிற்கு நடைமேடை நீளம் இல்லாத காரணத்தினால் கூடுதல் பெட்டிகள் இணைக்க முடியாத நிலை இருந்து வந்தது.

இதனை கருத்தில் கொண்டு தென் மாவட்ட எம்பி, எம்எல்ஏக்கள் ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், ரயில் பயணிகள் சங்கங்கள், பொதுமக்கள் அனைவரும் இந்த வழித்தடத்தில் உள்ள முக்கிய ரயில்வே நிலையங்களின் நடைமேடைகளை 24 பெட்டிகள் நிறுத்தும் அளவிற்கு நீட்டிக்க வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

அந்தக் கோரிக்கையை ஏற்று மதுரை ரயில்வே கோட்டம் சார்பில் திருச்செந்தூர் - நெல்லை - செங்கோட்டை - கொல்லம் ரயில் வழித்தடத்தில் உள்ள ரயில் நிலைய நடைமேடைகளை நீட்டிக்க முன்மொழிவு செய்துள்ளது. அதன்படிதிருச்செந்தூர் - நெல்லை இடையே திருச்செந்தூர், காயல்பட்டினம், ஆறுமுகநேரி, குரும்பூர் நாசரேத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர் ரயில் நிலையங்களிலும்,

நெல்லை - தென்காசி இடையே சேரன்மகாதேவி, கல்லிடை, அம்பை, கீழக்கடையம், பாவூர்சத்திரம் ஆகிய ரயில் நிலையங்களிலும் நடைமேடைகளை 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு 550 மீட்டர் நீளத்துக்கு அதிகரிக்கவும், செங்கோட்டை - புனலூர் இடையே புதுஆரியங்காவு, தென்மலை, எடமண் ஆகிய ரயில் நிலையங்களின் நடைமேடைகளை 450 மீ அதிகரிக்கவும், அவனீஸ்வரம், குரி, கொட்டாரக்கரை, குண்டாரா கிழக்கு குண்டாரா, சந்தனத்தோப்பு, கிளிகொல்லூர் ஆகிய ரயில் நிலையங்களின் நடைமேடைகளை 550 மீட்டர் அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது.

இந்த நடைமேடைகளை நீட்டிப்பதற்கான சாத்திய கூறுகள் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவை தயார் செய்யப்பட்டு வரும் பிப்ரவரி மாத பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு, உடனடியாக பணிகள் தொடங்குவதற்கு ஏதுவாக முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. இதுகுறித்து ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறுகையில், "பொதுமக்களின் தொடர் கோரிக்கையை ஏற்று ரயில் நிலைய நடை மேடைகளின் நீளத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கை எடுத்துள்ள மதுரை ரயில்வே கோட்ட அதிகாரிகளுக்கும், அதற்காக தொடர்ந்து குரல் கொடுத்த எம்பி எம்எல்ஏக்கள் அனைவருக்கும் நன்றி.

தற்போது கூட்ட நெரிசலை தவிர்க்க செந்தூர் எக்ஸ்பிரஸிலும், பாவூர்சத்திரம் அம்பை வழியாகச் செல்லும் செங்கோட்டை - தாம்பரம் வரை வாரம் மும்முறை ரயிலிலும் கூடுதல் தூங்கும் வசதி பெட்டிகள் இணைக்க முடியாத நிலை உள்ளது. 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நடைமேடைகள் நீட்டிக்கப்பட்டவுடன் மேற்கண்ட ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க முடியும். பண்டிகை காலங்களில் 24 பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில்களை இயக்கவும் முடியும். இது தென் மாவட்ட பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்" என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மதுரையின் அடையாளமான ஏ.வி. பாலத்தை பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும்.. 138வது ஆண்டு விழாவில் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.