தென்காசி: வாசுதேவநல்லூர் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் கிராமத்தில் இயங்கி வரும் வியாச கலை மற்றும் அறிவியல் மகளிர் கலைக்கல்லூரியின் ஆறாவது ஆண்டு கல்லூரி தின விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் கலந்து கொண்டார்.
இந்த கல்லூரி துவங்கிய நாட்களில் இருந்து வாசுதேவநல்லூர், சிவகிரி, புளியங்குடி, சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, வீரசிகாமணி, சேர்ந்த மரம், கள்ளமொழி, கடையநல்லூர், சொக்கம்பட்டி, சிந்தாமணி, சுரண்டை, ஆலங்குளம் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சுற்று வட்டார கிராமப்புறப் பகுதியில் இருந்து ஏராளமான பெண்கள், இந்தக் கல்லூரியில் படித்து வருகின்றனர்.
இந்த கல்லூரியில் பெரும்பாலான விவசாய குடும்பத்தைச்சேர்ந்த பெண்கள் படித்து வருகின்றனர். மேலும் இந்தக் கல்லூரி துவங்கப்பட்ட நாட்களில் இருந்து, பல பெண்கள் பல்வேறு விதமான துறைகளில் இந்த கல்லூரி மூலமாக சாதனைப் புரிந்துள்ளனர். மேலும் இந்த ஆண்டும் அதேபோல பல்வேறு விதமானப்போட்டிகளிலும் பல்வேறு துறைகளிலும் வெற்றி கண்ட பெண்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது.
கல்லூரியின் ஆறாம் ஆண்டு ஆண்டு விழாவை முன்னிட்டு மாணவிகள் தமிழ்ப்பண்பாடு நிறைந்த கலை நடனமும் மற்றும் பெண்களின் முன்னேற்றம் குறித்தான கலை நடனமும் அரங்கேற்றினர். மேலும் அன்புள்ளம் கொண்ட அம்மா என்ற பாடலுக்கு இக்கல்லூரி மாணவிகள் தத்ரூபமாக நடித்திருந்தது அதைப் பார்த்தவர்களின் கண்களை கலங்கடித்தது.
மேலும் இக்கல்லூரில் கடந்த ஆண்டு பல்வேறு துறைகளில் வெற்றி பெற்ற சுமார் 56 மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் தமிழரின் பண்பாடு குறித்தான விழிப்புணர்வு அடங்கிய நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மனோன்மணியம் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர், சேர்மன் வெள்ளத்துரை பாண்டியன், நிர்வாக இயக்குநர் வெள்ளத்தாய், உதவி சேர்மன் பிரகாச வள்ளி, முதல்வர் ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் கல்லூரியின் பெண்கள் என்ற தலைப்பில் பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகளை மாணவிகள் நிகழ்ச்சிகளை வெகு சிறப்பாக நடத்தினர்.